சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான ரவி. இவர், கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 23 வயதான பெண்ணை திருமணம் முடித்த ரவிக்கு, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதற்கிடையே, கடந்த ஜூன் 1ஆம் தேதி வீட்டிலிருந்த ரவி திடீரென்று காணாமல் போனார். எங்கு தேடியும் ரவியை காணமுடியவில்லை. அப்போது கோயம்பேடு போலீசார் அவரை அழைத்து சென்றதாக தெரிந்து காவல் நிலையத்திற்கு சென்ற அவரது மனைவி, கணவர் ரவி குறித்து விசாரித்திருக்கிறார். ஆனால் அப்படி ஒருவரை அழைத்து வரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். வீட்டிற்கும் வரவில்லை, சென்ற இடத்திற்கும் சேரவில்லை என்ற குழப்பத்தில் துடிதுடித்து போன, பெண் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வந்தனர். இதற்கிடையே ரவியின் மனைவியால் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதுதான் பேரதிர்ச்சி காத்திருந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


சென்னை அடுத்துள்ள மதுராந்தகம் பழையனூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த ஜூன் 4-ஆம் தேதி உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கை மற்றும் கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்த நிலையில் கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த படாளம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் குறித்த தகவல்கள் கிடைக்க, போலீசார் மிரண்டு போனார்கள். ஆம், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கார் டிரைவர் ரவிதான் சடலமாக மீட்கப்பட்டார். 



எதற்காக ரவி கொலை செய்யப்பட்டார் ? யார் அவரை கொலை செய்தார்கள் ? என்ற கேள்விக்கு விடைதேட தொடங்கிய போலீசாருக்கு, ஒரு போலீசாரே வழி போட்டு கொடுத்திருக்கிறார். கொல்லப்பட்ட ரவியின் வீட்டருகே, வசித்து வந்தவர்தான் செந்தில் குமார். காவலராக பணியாற்றி வருகிறார். ரவியும் செந்தில்குமாரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த 20 நாட்களாக எதிரிகளாக வலம் வந்திருக்கிறார்கள்... 


எல்லாம் தகாத உறவுக்காக....  



ஏற்கனவே, திருமணமானதாக சொல்லப்படும் சாந்தி என்பவருக்கும் காவலர் செந்தில் குமாருக்கு இடையே நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதற்கிடையே செந்தில் குமாரின் ரகசிய காதலியிடம் கார் டிரைவர் ரவி நெருங்கி பழகியிருக்கிறார். இதில் சாந்திக்கும் ரவிக்கும் புது உறவு உண்டானதாக தெரிகிறது. இங்குதான் பிரச்சினை உருவெடுத்தது. 


தன்னுடைய ரகசிய காதலியை அபகரிக்க பார்த்த ரவி மீது செந்தில் குமார் ஆத்திரமடைந்திருக்கிறார். இது குறித்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, ரவியை சமாதானம் செய்ய தனது வீட்டுக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார், செந்தில்குமார். ஆனால் அன்று சமாதானம் நடக்கவில்லை எல்லாம் தலைகீழாய் நடந்தது. இருவரும் சாந்திக்காக வாக்குவாதத்தில் ஈடுபட ரவி செந்தில்குமாரிடம் எச்சரிக்கை விட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் ரவியை அடித்து உதைத்து; காலை கழுத்தில் வைத்து அழுத்தி கொன்றிருக்கிறார்.



பின்னர் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று யோசித்தவர், வீட்டை காலி செய்ய முடிவெடுத்தார். பொருட்களை கட்டி அடுக்கி வைத்தவர், ரவியின் உடலை யும் மூட்டை கட்டினார். வண்டிக்கு சொல்லி அனுப்பி பொருட்களை ஏற்றியவர் ; ரவியின் உடலையும் ஏற்றினார். பின்னர், போகும் வழியில் பழையனூர் நெடுஞ்சாலையில் வைத்து ரவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்திருக்கிறார். பின்னர் அவர் பணிக்காக காவல் நிலையம் செல்லவில்லை. மாறாக எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.


மேலும் படிக்க | ONE SIDE LOVE : லவ் சொல்ல மறுத்த இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற சைக்கோ!



இந்நிலையில் தற்போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரவியின் ஒரு கால், பழைய இரும்பு கடையிலும், ஒரு கை புதர் பகுதியிலும் கிடந்துள்ளது. இதனை அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கிடைத்த உடல் பாகங்கள் சேகரித்து வழக்கில் முக்கிய புள்ளியாக குறிக்கப்பட்ட ரகசிய காதலி சாந்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதில், மேலும் 6 பேருக்கு கொலையில் தொடர்பிருப்பதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டது. கொடூரமாக அரங்கேறிய வழக்கில் அடுத்தடுத்து தொடரும் மர்மத்திற்கு தப்பியோடிய தலைமறைவானதாக சொல்லப்பட்டும் காவலர் செந்தில்குமார், பிடிபட்ட பின்னரே விடை கிடைக்கும்...


மேலும் படிக்க | மகளை கட்டிக்க மறுத்த தம்பி ; தம்பிக்கு பிறந்த குழந்தையை கொன்ற அரக்கிக்கள் !


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR