சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தில் இன்று முதல் 50% தள்ளுபடி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி.
சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான ஒரு திட்டமாகும். புது தில்லியில் கட்டப்பட்ட மெட்ரோவின் வெற்றியில் உந்தப்பட்டு, அதேபோல ஒரு பொதுப்போக்குவரத்துத் திட்டத்தை சென்னையிலும் செயலாக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக ஜனவரி 17- ஆம் தேதி காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் பெரும்பாலும் சென்னை மெரினா கடற்கரைக்கு வருவார்கள் என்பதால், அன்றைய தினம் அரசினர் தோட்டம், டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரை வரை பயணிகளின் வசதிக்காக சீருந்து இணைப்பு சேவைகள் (CAB) இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.