தீபாவளி : சென்னை மெட்ரோ சேவை நீட்டிப்பு, பயணிகளுக்கு ஒரு கண்டிஷன்
Chennai Metro Diwali : தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படும். ஆனால் பயணிகளுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளது சென்னை மெட்ரோ.
Chennai Metro | தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், மக்களுக்கு போக்குவரத்து சிக்கல் இல்லாமல் இருக்கவும் சென்னை மெட்ரோ குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களும் மெட்ரோ சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. அதேநேரத்தில் ஒரு கண்டிஷனையும் போட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை இயக்கம் குறித்தும், பயணிகளுக்கான கண்டிஷன் குறித்தும் இங்கே விரிவாக பார்க்கலாம்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், " தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக நாளை 30.10.2024 (புதன்கிழமை) மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் அட்டவணையின் படி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணிக்குப் புறப்படும். கடைசி மெட்ரோ அனைத்து ரயில் முனையங்களில் இருந்தும் இரவு 12 மணிக்கு புறப்படும்" என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தீபாவளி போனஸ்... எவ்வளவு?
மெட்ரோ ரயில் இயக்கம் வழித்தடம் மற்றும் நேரம் தொடர்பான அறிவிப்பு
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:
- பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
- காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 12 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்
- 31.10.2024 (வியாழக்கிழமை) மற்றும் 01.11.2024 (வெள்ளிக்கிழமை) மெட்ரோ இரயில்கள் விடுமுறை நாள் அட்டவணையின்படி இயங்கும்:
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ பயணிகளுக்கான முக்கிய கண்டிஷன் :
கடைகளுக்கு சென்று புதுத்துணி வாங்கி செல்லும் பயணிகள், மறந்தும் பட்டாசு வாங்கிக் கொண்டு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்லாதீர்கள். பட்டாசு கொண்டு செல்லும் பயணிகளுக்கு மெட்ரோ ரயில் சேவையில் அனுமதியில்லை. பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசுகளை மெட்ரோ ரயிலில் அனுமதிக்க முடியாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 2022 சட்டப்பிரிவு 1ன் கீழ் மெட்ரோ ரயிலில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கண்டிப்பான விதிமுறையை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | டிரைவரே இல்லாமல் ஓடப்போகும் சென்னை மெட்ரோ ரயில் - இந்தியாவிலேயே முதல்முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ