தமிழ்நாடு: சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்  (Chennai Metro) டிசம்பர் 24 முதல் 26 வரை 9 கி.மீ நீளமுள்ள வடக்கு சென்னை பாதையில் சோதனை ஓட்டங்களைத் தொடங்கும். CMRL ஜனவரி 2021 இல் நீட்டிக்கத் தயாராகி வருகிறது. சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை (Washermenpet) வரையிலும், பரங்கிமலை முதல் சென்னை ரயில் நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.


ALSO READ | சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு


இந்த திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் (Wimco Nagar) இடையே ரூ. 3,770 கோடியில் 9 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இந்த வழித்தடத்தில் சிக்னல்கள் மற்றும் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்த பாதையில் இன்று முதல் சோதனை ஓட்டம் நடக்கிறது. பின்னர் ஜனவரி 2வது வாரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், அதிவேகமாக மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடத்துவார் என்று தெரிகிறது.


பயணிகள் ரயில் இயக்க அனுமதி கிடைத்ததும் ஜனவரி இறுதிக்குள் வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் – விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவங்க மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


ALSO READ | மெட்ரோ பயணிகளின் கனிவான கவனத்திற்கு: உங்களை வரவேற்க காத்திருக்கிறது Chennai Metro!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR