சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர்ப் பகுதியைச் சேர்ந்த மணி, வள்ளுவர் கோட்டம் பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரம் செய்து வருகிறார். நேற்றிரவு அவரிடம் காய்கறி வாங்க வந்த முதியவர் ஒருவர், காய்கறிகளை வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டைக் கொடுத்திருக்கிறார். அந்த ரூபாய் நோட்டை ஆய்வு செய்த மணி, அது கள்ளநோட்டு என்பதை தெரிந்துகொண்டார். அந்த ரூபாய் நோட்டை முதியவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டு, வேறு ரூபாய் நோட்டு தரும்படி கேட்டிருக்கிறார். அப்போதும் முதியவர் இன்னொரு 500 ரூபாய் நோட்டைக் கொடுத்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திலகவதி ஐபிஎஸ் மகனுக்கும் மனைவிக்கும் பிரச்சனை? முன்னாள் ஏடிஜிபியுடன் பப்புக்கு சென்றதன் பின்னணி என்ன?


அதுவும் கள்ளநோட்டுபோல தெரிந்ததால், சந்தேகத்தின் பேரில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மணி தகவல் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் முதியவர் வைத்திருந்தது கள்ளநோட்டு என்பதை காட்டிக்கொள்ளாமல் அவரிடம் மணி பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு நுங்கம்பாக்கம் போலீஸார் விரைந்து வந்து மணியிடம் விசாரித்தனர். அப்போது மணி, கள்ளநோட்டு ரூபாயைக் கொடுத்த முதியவர் குறித்த தகவலை போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த முதியவரைப் பிடித்த போலீஸார், அவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து முதியவரிடம் விசாரித்தபோது, அவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகள் எனத் தெரியவந்தது. 



அது தொடர்பாக முதியவரிடம் விசாரித்தபோது, 500 ரூபாய் கள்ளநோட்டுகளைக் காய்கறிக்கடையில் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, முதியவர் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரின் பெயர் அண்ணாமலை, பள்ளிக்கரணையில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும் தெரிந்தது. இதையடுத்து, கள்ளநோட்டுகள் எப்படிக் கிடைத்தன என அண்ணாமலையிடம் போலீஸார் துருவித் துருவி விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து இதுவரை 45.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 


இந்த தகவல் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எவ்வளவு ரூபாய் நோட்டுகளை இதுவரை புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள்?, அவர்களின் தொடர்புகள் யார் என்பது குறித்தும் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.


மேலும் படிக்க | குப்பை கொட்டுவதில் வந்த பிரச்சனை! இளைஞர் மீது சுடுதண்ணீர் ஊற்றிய தம்பதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ