திலகவதி ஐபிஎஸ் மகனுக்கும் மனைவிக்கும் பிரச்சனை? முன்னாள் ADSP உடன் பப்புக்கு சென்றதன் பின்னணி என்ன?

திலகவதி ஐபிஎஸின் மகன் பிரபு திலக், முன்னாள் ஏடிஜிபி சங்கருடன் போனில் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபு திலக்கின் மனைவி சங்கருடன் பப்புக்கு போனது குறித்து இவர்களின் உரையாடல் இருந்தது. இந்நிலையில், உண்மையில் என்ன தான் பிரச்சனை என்பது குறித்து இதில் காணலாம். 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Sudharsan G | Last Updated : Aug 18, 2023, 10:22 PM IST
  • பிரபு திலக் மற்றும் அவரின் மனைவி விவாகரத்து கோரியுள்ளனர்.
  • போலீஸ் அதிகாரி சங்கர் கடந்த மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
  • முன்னாள் ஏடிஜிபி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க பிரபு திலக் கோரிக்கை.
திலகவதி ஐபிஎஸ் மகனுக்கும் மனைவிக்கும் பிரச்சனை? முன்னாள் ADSP உடன் பப்புக்கு சென்றதன் பின்னணி என்ன? title=

தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி தான் திலகவதி. இவருக்கு பிரபு திலக் என்ற மகன் உள்ளார். இவர் ஸ்ருதி என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை கடந்த ஆண்டில் கசப்பான நிலையை எட்டியதாக கூறப்படுகிறது. 

வரதட்சணை புகார் 

அதாவது, திடீரென ஸ்ருதி தனது கணவர் பிரபு திலக் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை அடுத்து அதற்கு பிரபு திலக் மறுப்பு தெரிவித்திருந்தார். திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் கழித்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகாரளிப்பது வேதனையாக இருப்பதாகவும் அவர் பேசி இருந்தார். 

வைரலான ஆடியோ

அதன்பிறகு இருவரும் தற்போது விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சில நாட்களுக்கு முன்பு பிரபு திலக், முன்னாள் ஏடிஜிபி சங்கர் என்பவருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில் ஸ்ருதியும், முன்னாள் ஏடிஜிபி சங்கரும் பப் ஒன்றுக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அதற்கு ஆதாரம் இருப்பதாகச் சொல்லி பிரபு திலக் கேள்வி எழுப்ப முதலில் அதை மறுத்த சங்கர் பின்பு ஆமாம் என ஒத்துக்கொள்கிறார். இந்த ஆடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. 

மேலும் படிக்க | ஓட்டுநர், நடத்துநர் பணி: அரசாணை வெளியீடு

டிஜிபியிடம் புகார்

இந்த சூழலில் இப்போது என்ன தான் நடக்கிறது என்பது குறித்து பிரபு திலக்குக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தன. சங்கர், ஸ்ருதி இருவரும் பப்புக்கு சென்றது குறித்த தெரிந்ததும், அப்போதைய டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் அளித்துள்ளார். சங்கரால் இவர்கள் குடும்பத்தின் நிம்மதி பறிபோனதாகவும், போலீஸ் அதிகாரி விவாகரத்து பெறாத ஒரு பெண்ணுடன் எப்படி குடிக்கலாம் எனவும் கேட்டு பிரபு திலக் புகார் கொடுத்துள்ளார். இப்படி செய்ததற்காக சங்கர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார் பிரபு திலக். 

நடவடிக்கை இல்லை?

டிஜிபி இந்த புகாரை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளார். அதோடு இந்த வழக்கை புருஷோத்தமன் டிஎஸ்பி விசாரணை செய்துள்ளார். ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பிரபு திலக் மின்னஞ்சல் மூலம் புருஷோத்தமன் மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுக்கு தனது புகாரை தெளிவாக எழுதி அனுப்பியுள்ளார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் சங்கர் மீது எடுக்கப்படவில்லை. கடந்த ஜூலை 31ஆம் தேதி சங்கர் ஏடிஜிபி ஓய்வுபெற்றார். ஆனால் அதுவரை இவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இதற்கு நடுவே கடந்த ஜூலை 29ஆம் தேதி பிரபு திலக்கை போன் மூலம் தொடர்பு கொண்ட புருஷோத்தம்மன் வழக்கின் விவரம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவரும் சரிவர விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

வேதனைப்படும் நண்பர்கள்

அதன்பிறகு ஆகஸ்ட் 3ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் ரிட் அப்பீல் செய்துள்ளார். அந்த வழக்கின் வாய்தா இந்த மாதம் இறுதியில் தான் நடக்கிறது. போலீஸ் அதிகாரி ஒருவர் திருமணம் ஆன பெண்ணுடன் பப்புக்கு சென்று குடிப்பது தவறு என்றும், சாதாரண மனிதர்கள் இப்படி செய்தால் பரவாயில்லை, பொறுப்பில் இருக்கும் அதிகாரி இப்படி செய்தால், அது மற்ற தொடக்க நிலை காவலர்களுக்கு தவறான முன்னுதாரனமாக அமைந்துவிடாத எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இப்படியே விட்டால் வழக்குக்காக காவல்நிலையம் வரும் பெண்களிடமும் இவர்கள் தவறாக நடந்துகொள்ள மாட்டார்களா என பிரபு திலக்கின் நண்பர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த புகாருக்கு இப்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க | சாதிய அடையாளங்களை தாமாகவே முன்வந்து அழித்த மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News