விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த மனநோயாளி மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு
விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் மிரட்டல் விடுத்த குற்றவாளிக்கு எதிராக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் (Chennai Cyber Crime) பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
CHENNAI: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது மைனர் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வரும் வேளையில், குற்றவாளிக்கு எதிராக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் (Chennai Cyber Crime) பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தை ஆதரித்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் (Muthiah Muralidaran) வேடத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதியை பலர் விமர்சித்திருந்தாலும், சமூக ஊடகத்தில் ஒருவர் எந்தவித பயம் மற்றும் அறிவு இல்லாமல் ஆபாசமாக மிரட்டல் விடுத்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்திய சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் (Mahesh Aggarwal) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் கிடைத்ததும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் "ஒரு பிரபலத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து மிகவும் கவலையாக உள்ளது. இது தொடர்பான புகார் கிடைத்தவுடன் சைபர் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ | 800 படத்திலிருந்து விலகல்: விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்…
கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கம், பொது இடத்தில் ஆபாசமான வாரத்தைகளை பயன்படுத்துதல் மற்றும் ஐபிசியின் 153, 294 (பி) பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 பி ஆகியவற்றின் கீழ் முறைகேடான விஷயங்களை இணையம் மூலம் பரப்பியதற்காக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் கற்பழிப்பு அச்சுறுத்தலை வெளியிட்ட சமூக ஊடக பயனருக்கு எதிராக பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் நெட்டிசன்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். தமிழக முதல்வர் மற்றும் சென்னை நகர காவல்துறையினரின் ட்விட்டர் பக்கத்தில் பலர் புகார் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக செவ்வாயன்று, திமுக எம்.பி. கனிமொழி (DMK MP Kanimozhi), பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்குகளாக மாற்றுவது ஒரு கோழைத்தனமான செயல் என்றும், குற்றவாளி மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் என்பது காட்டுமிராண்டித்தனம் மட்டுமல்ல, நம் சமூகத்தில் மிகவும் ஆபத்தானது. குற்றவாளி மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | "800" படத்தின் Motion Poster வெளியானது: முத்தையா முரளிதரனாக மாறிய விஜய்சேதுபதி!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR