"800" படத்தின் Motion Poster வெளியானது: முத்தையா முரளிதரனாக மாறிய விஜய்சேதுபதி!

முத்தையா முரளிதரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் பிரபலம் என்பதால், இந்த படம் தென்னிந்திய மொழிகளைத் தவிர இந்தி, பெங்காலி மற்றும் சிங்கள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 14, 2020, 10:46 AM IST
"800" படத்தின் Motion Poster வெளியானது: முத்தையா முரளிதரனாக மாறிய விஜய்சேதுபதி! title=

'800' Motion Poster Released: 800 என்ற தலைப்பில் வரவிருக்கும் முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றின் படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான முத்தையா முரளிதரனின் (Muttiah Muralitharan) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம். இப்படம் இலங்கை, யு.கே, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படும், 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து படப்பிடிப்பு நடைபெறும். தயாரிப்பாளர்கள் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த படத்தை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

தரன் ஆதர்ஷ் வீடியோவை ட்வீட் செய்துள்ளார், "முரளிதரன் பயோபிக் ... #முரளிதரன்பயோபிக் மோசன் போஸ்டர் வெளியானது.

 

ALSO READ |  800 படத்திற்கு விஜய் சேதுபதி மிகவும் பொருத்தமானவர் என முத்தையா முரளிதரன் பாராட்டு...!!!

முத்தையா முரளிதரன் மற்றும் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) ஆகிய இருவரும் பிரபலம் என்பதால், இந்த படம் தென்னிந்திய மொழிகளைத் தவிர இந்தி, பெங்காலி மற்றும் சிங்கள மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட உள்ளது. ஆங்கில வசனங்களுடன் ஒரு சர்வதேச பதிப்பையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News