சென்னையில் ஒரே நாளில் உணவு டெலிவரி செய்யும் 978 பேர் மீது வழக்கு! எதற்கு தெரியுமா?
போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறையினர் 978 உணவு டெலிவரி செய்யும் நபர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதோடு, அபராதமாக 1 லட்சத்து 35 ஆயிரம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் பெரும்பாலும் ஜொமேடோ, ஸ்விகி மற்றும் டன்சோ ஊழியர்கள் தான். இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெலிவரி செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு இயக்கத்தில், ஹெல்மெட் அணியாத மற்றும் சாலையில் தவறான ரூட்டில் செல்பவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க |கோவையில் சீனியரை நிர்வாணமாக்கி அடித்த ஜூனியர் மாணவர்கள்!
ஒருசில உணவு டெலிவரி ஆப்கள் குறைந்த நேரத்தில் உணவை டெலிவரி செய்வதாக வாக்களிக்கின்றன. இதனால் டெலிவரி செய்யும் பணியாளர்கள் வேகமாக இலக்கை நோக்கி பயணிக்க வேண்டிய சூழல் வருவதால் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அதோடு போனில் வீட்டின் முகவரியை பார்த்துக்கொண்டே வாகனத்தை ஓட்டுகின்றனர். சிக்னல்களை மதிப்பதும் இல்லை. வேகமாக பைக் ஓட்டுவதால் அவர்களுக்கும் ஆபத்து, அவர்களால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து என்று காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்விக்கி ஓட்டுநர்கள் 450 பேர் சாலை விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 278 ஜொமேடோ டெலிவரி பணியாளர்கள், 188 டொன்சோ டெலிவரி பணியாளர்கள் மற்றும் 72 பிற டெலிவரி பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரி செய்யும் நபர்களை தாண்டி ரேபிடோ, அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களும் சாலை விதிகளை மீறியுள்ளனர்.
போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் இன்ஸ்டண்ட் டெலிவரி மூலம் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்ய சொமேடோ விளம்பரம் செய்த நிலையில், அதற்கு சென்னை காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு அந்த திட்டம் சென்னையில் செயல்படுத்தப்படாது என சொமேடோ நிறுவனம் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR