ஜெயக்குமார் மக்களுக்கு உதவி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரு.வி.க நகர் மக்களுக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வியாசர்பாடி ஆடுதொட்டி பகுதியில் நிவாரண பொருட்களை வழங்கினார். திரு.வி.க நகர் பகுதியில் சுமார் 300 பேருக்கு பால், வாழைப்பழம், பிஸ்கட், உணவு மற்றும் சாப்பாடு போன்றவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், " சென்னையில் கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் , ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களுக்காக செயல்படுகிறோம். மிக்ஜாம் புயல் அல்லது எந்த இயற்கை இடர்ப்பாடாக இருந்தாலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய வருவார்கள்.


மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்பு


எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை சரியாக சொல்ல வேண்டும். போலியாக கணக்கு சொல்லாமல் முறையாக தெரியப்படுத்த வேண்டும். புயலின் தாக்கத்தால் நடுத்தர வர்க்கம் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை வெள்ளக்காடாக மாறி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திரு.வி.க நகர் பகுதியில் முழுமையாக பாதிப்பு இருக்கிறது. பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. புயலுக்கு முன்பாகவே முறையான அறிவிப்பு கொடுங்கள். பல மக்களின்  வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்கள், உடைகள் எல்லாம் தண்ணீரில் போய் விட்டது. 


மேலும் படிக்க | வீடு திரும்பினார் விஜயகாந்த்... 20 நாள்களுக்கு பின் டிஸ்சார்ஜ்!


மிக்ஜாம் நிவாரண நிதி அதிகரிப்பு


விலைவாசி உயர்வு இருப்பதால் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு கொடுக்கப்படும் 6000 ரூபாய் போதுமா?, 12000  ரூபாயாக கொடுக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் 5000 கொடுத்தோம். அன்றைக்கு விலைவாசி வேறு. இன்றைக்கு விலைவாசி வேறு. அதனால் 12000 கொடுத்தால் தான் சரியாக இருக்கும். அதிமுக ஆட்சியில் புயல் காலத்தில் தூய்மை பணியாளர்களை வெளியில் இருந்து கொண்டு வந்து ஊக்கத்தொகை கொடுத்தோம். அதையும் இந்த அரசு தரவில்லை. கேட்டால் நிதி நெருக்கடி என்பார்கள். எங்கள் ஆட்சியிலும் நிதி நெருக்கடி இருந்தது. அந்த சூழலிலும் எந்த புயலாக இருந்தாலும் மக்களுக்கு வேண்டியதை செய்தோம். மக்களின் எண்ணத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு. 


பொம்மை முதலமைச்சர் என சாடல்


புயல் பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் தான் தினமும் இதை பற்றி பேசுகிறார். பொம்மை முதலமைச்சர் எதுவும் பேசவில்லை. இன்றைக்கு தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது. சென்னை வரலாற்றில் இதுவரை அமைச்சர்கள், மேயரை விரட்டிய வரலாறு கிடையாது. பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. மின்சாரமும் கொடுக்கவில்லை.‌ பல இடங்களில் சேறு சகதியாகவும், குப்பைகளும் எடுக்கவில்லை. சரியான திட்டமிடுதல் கிடையாது. பக்கிங்காம், கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆற்றை தூர்வாரினால் தண்ணீர் வெளியேறும். இந்த அரசு அதை பண்ணவில்லை. வடிகாலே அமைக்காவிட்டால் தண்ணீர் எப்படி கடலில் கலக்கும். 


திருப்புகழ் கமிட்டி அறிக்கை எங்கே?


சென்னை பெரு வெள்ள பாதிப்பு குறித்து திருப்புகழ் கமிட்டி கொடுத்த அறிக்கையினை வெளியிடாதது ஏன்?, திமுக ஆட்சியில் தானே அந்த கமிட்டி அமைக்கப்பட்டது.  அந்த அறிக்கையின்படி செயல்பட்டு இருந்தால்  இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. தண்ணீர் தேங்கவில்லை.‌ மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அமைச்சர் மா.சு சொல்கிறார். மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த ஆட்சியிலும் இப்படி மோசமாக இருந்தது இல்லை. வானிலை ஆய்வு மையம் கனமழை இருக்கிறது என்று சொல்லியும் இந்த அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை. இன்றைக்கு சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டத்தில் மக்கள் பரிதவிக்கிறார்கள். 


அதிமுக சிறப்பாக செயல்பட்டது


2015-ல் நாங்கள் எடுத்த நடவடிக்கையால் தான் மீண்டும் வர முடிந்தது. இதன் தாக்கம் 2024 -ல் இருக்கும். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை அரசு இல்லை‌.  செயற்கை அரசாங்கம். நவம்பர் 5 முதல் டிசம்பர் 5 வரை மழை 50 சதவீதம் தான். இதற்கே தாங்க முடியவில்லை. மக்கள் ரொம்ப கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசை வலியுறுத்தி நிதியை அதிகமாக வாங்கி கொடுக்க வேண்டும்.


ஜெயக்குமார், மா.சுப்பிரமணியத்துக்கு சவால்


அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுத்த சவாலுக்கு நான் ரெடி. எங்களை பொறுத்தவரை நாங்கள் எப்போதும் விவாதிக்க தயார். வெள்ளை அறிக்கையை கொடுக்க சொல்லுங்கள். நாளை வெள்ளை அறிக்கையை கொடுத்து விட்டு விவாதத்திற்கு கூப்பிடுங்கள். நாளை மறுநாளே விவாதத்திற்கு வருகிறேன்" என பேசினார். 


மேலும் படிக்க | மிக்ஜாம் நிவாரண நிதி: பாதிக்கப்பட்டவர்கள் பெறுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ