மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கானோரின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது. புயலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்பட இருக்கிறது. சேதமடைந்த குடிசைகளுக்கு 8 ஆயிரமும் கொடுக்கப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 17 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும்.
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக 37,500 ரூபாய் கொடுக்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக 4,000 ரூபாய் கொடுக்கப்படும். மீனவர்களுக்கு முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட 50 ஆயிரம் ரூபாய், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும். முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ஒரு இலட்சம் ரூபாயாகவும், சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு 7.50 இலட்சமாகவும் கொடுக்கப்படும். சேதமடைந்த வலைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கடலில் மழை நீர் உள்வாங்கவில்லை... அதுதான் பிரச்னை... மா.சுப்பிரமணியனின் விளக்கம்
இதனை தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழக அரசு நிவாரண தொகை வழங்குவது பாராட்டக்குரியது எனவும் அந்த தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக கொடுக்க வேண்டுமென கோரியுள்ளார். ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளதோடு, நியாயமாக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு,நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில் இந்த பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்த வித சிரமும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனடிப்படையிலேயே புயல் நிவாரண நிதி வங்கியில் செலுத்தப்படுமா? அல்லது நியாயவிலைக் கடைகள் மூலம் கொடுக்கப்படுமா? என்பது தெரியவரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ