சென்னை: கே.கே.நகரிலிருந்து நெசப்பாக்கம் செல்லும் வழியில் அமைந்துள்ளது அண்ணா மெயின் சாலை. அந்த சாலையிலுள்ள நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முன்புறம் திடீரென ஏற்பட்ட ராட்சதப் பள்ளத்தில், அங்கு நின்றிருந்த டெம்போ வேன் ஒன்று விழுந்துவிட்டது. உடனடியாக பலர் அதை போராடி மீட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஓராண்டில் இதுவரை 6 முறை இதுபோன்ற ராட்சதப் பள்ளங்கள் தோன்றியிருப்பதால், அந்த சாலையை பயன்படுத்த மக்கள் அஞ்சுகின்றனர். தொடர்ந்து பள்ளங்கள் ஏற்படுவதற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சியின் (Chennai Corporation) மத்திய வட்டார கண்காணிப்புப் பொறியாளரிடம் நாம் கேட்ட போது, சைதாப்பேட்டை, அஷோக் நகர், ஈக்காட்டுத்தாஙகல் வழியாக கழிவுநீரைக் கொண்டுவந்து, நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீரை சேர்க்கும் ராட்சதக் குழாய்கள் இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைத்து 20 வருடங்கள் ஆகிவிட்டதால், தொடர்ந்து அவற்றில் ஏறப்டும் பாதிப்பினால் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றதாகவும்,  இந்தக் குழாய்களை மறு சீரமைப்பு செய்வதற்கான விவரஙகள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். 


ALSO READ: கவனம் தேவை! சென்னை நகரின் இந்த பகுதிகளில் மின்தடை இருக்கும்!


தற்போது அமைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் 10 வருடங்களாக கழிவுநீரினால் உருவாகும் அமில வாயுக்களைத் தாங்கும் எனும் நிலையில், அவற்றை 20 வருடங்களாக பராமரிபின்றி வைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி. அவ்வப்போது ராட்சதப் பள்ளங்கள் ஏற்படும் என்பதாலேயே, நெசப்பாக்கம் செல்லும் சாலையின் ஒரு பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் அடைத்துவிட்டனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


வாகனஙகள் (Vehicles) செல்ல தடை செய்யபட்டிருக்கும் சாலை வழியை சென்னை மாநகராட்சி ஆக்கிரமித்து, தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை நிறுத்த மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. அதனருகே பொதுமக்களின் வாகனங்களும், ஜே.சி.பி, மணல் லாரி, குப்பை அள்ளும் லாரிகள் ஆகியவை நிறுத்தப்படுகின்றன. 


அப்படி டெம்போ வேன் ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வேன் விழுந்திருக்கிறது. சாலையின் ஒரு பக்கம் மட்டுமே பள்ளம் ஏற்பட்டதால் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. ஒருவேளை இன்னொரு பக்கமும் பள்ளம் நீண்டிருந்தால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பாதிப்பாக அமைந்திருக்கும் என்கின்றனர் பொதுமக்கள்.


நெசப்பாக்கம் பிரதான சாலையில்  தொடர்ந்து இப்படிப்பட்ட ராட்சத பள்ளங்கள் அவ்வப்போது ஏற்படுவதால், இப்பகுதி பொதுமக்களும் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கழிவுநீரைத் தாங்கும் குழாய்கள் காரணமாக ஏற்கனவே சாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வருடா வருடம் பெய்யும் கன மழையும் (Rain)  இந்த நிலையை இன்னும் மோசமடையச் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ: அதிமுகவை உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை: ஓபிஸ் தரப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR