சென்னை திருவெற்றியூர் அடுத்த சடையாங்குப்பம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் மரத்தினால் ஆன பாலம் ஒன்று இருந்தது. அந்தப் பாலத்தின் வழியாகத்தான் சடையாங்குப்பம் பகுதியில் இருந்து சத்தியமூர்த்தி நகர் மற்றும் எண்ணூர் எர்ணாவூர் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வழியாக பயன்படுத்தி வந்தனர். கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங் காம் கால்வாய் செல்லக்கூடிய பாதைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வெள்ளநீர் சடையாங்குப்பம் பகுதியில் சூழ்ந்து அடிக்கடி மரப்பாலம் அடித்து செல்லப்படும். மரப்பாலம் வெல்ல நீரில் சேதம் அடைந்தால் எண்ணூர் சத்தியமூர்த்தி நகர் பகுதிகளுக்கு வருவதற்கு நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய சூழ்நிலை இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரூல்ஸ் இல்ல... எப்பனாலும் கிடைக்கும்... மது விற்பனை படுஜோர்!


அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதிக்கு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 18 மாதங்களில் முடிக்க வேண்டிய மேம்பாலம் பணிகள் சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பணிகள் 95 சதவீதம் முடிந்த நிலையில் மேம்பாலத்தில் மின்விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. மேம்பாலம் கட்டும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து ஓராண்டுகளுக்கு மேலாகி இருக்கக்கூடிய நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக அந்தப் பகுதி மக்கள் தமிழக அரசு மேம்பாலத்தை திறப்பதற்கு முன்பே பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.


பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் இரவு நேரங்களில் அந்த மேம்பாலம் வழியாக வரும்போது மின்விளக்குகள் இல்லாததால் அச்சத்துடனே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் மேம்பாலத்தில் சமூகவிரோதிகள் அமர்ந்து மது அருந்தி பாட்டில்களை மேம்பாலத்தின் மீது உடைத்து விட்டு செல்வதாகவும் காவல்துறை அந்த பகுதிகளுக்கு இரவு நேரங்களில் ரோந்து வருவதில்லை எனவும் உடனடியாக தமிழக அரசு மேம்பாலத்தில் சிசிடிவி கேமரா மற்றும் மின்விளக்குகளை பொருத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முறைப்படி திறந்து வைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் ஆயிரம் குடும்பங்கள் இருக்கக்கூடிய அந்த பகுதிக்கு பேருந்து அல்லது மினி பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும், இல்லையென்றால் வெகு தூரம் நடந்து சென்று பேருந்தில் ஏறி பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் தங்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சடையாங்குப்பம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் படிக்க | சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் குழித்துறை நீதிமன்றம் உத்தரவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ