கொட்டி தீர்த்த கனமழை! வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி!

வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையில், மழை நீர் மற்றும் கால்வாய் நீர் கலந்து வெளியேறாததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 12, 2024, 02:08 PM IST
  • வேலூரில் கொட்டி தீர்த்த கனமழை.
  • பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி.
  • மாவட்டம் முழுவதும் 791.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
கொட்டி தீர்த்த கனமழை! வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி! title=

வேலூரில் பெய்த அதிக கனமழையின் காரணமாக வேலூர் மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரும் கழிவு நீரும் கலந்து வெளியேற வழி இல்லாமல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்க கூட நடக்க முடியாமல் கடும் அவருக்குள்ளாகினர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் வெளியே செல்ல வழி இல்லாத நிலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனரக வாகனங்கள் மழை நீரில் சிக்கி அங்கங்கே நின்றதால், அடுத்த பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் செல்ல முடியாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். 

மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்

குறிப்பாக காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் முதல் பழைய காட்பாடி முத்தமிழ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் மாணவர்களும் தவித்தனர். மேலும் காட்பாடி நீதிமன்ற வளாகம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் மழை நீர் தேங்கி தண்ணீர் வெளியேற முடியாமல் தனித்தீவு போல் காட்சியளித்தது. சாலை மேம்பாடு மற்றும் பல்வேறு பணிகளால் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழை நீர் செல்ல வழி இல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தேங்கியுள்ளது இதனை அடுத்து மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைநீர் வெளியேற மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிருஷ்ணகிரியிலும் மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக லேசானது முதல் மிதமானது வரையிலான மழை அவப்பொழுது பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி காலை முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது மாவட்டம் முழுவதும் நெடுங்கல், போச்சம்பள்ளி, பெனுகொண்டபுரம், கிருஷ்ணகிரி, பாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக காவேரிப்பட்டினம் எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மழை நீர் புகுந்தது. 

அங்குள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் அவதிக்குள்ளாகினர். எம்ஜிஆர் நகர் பகுதி முழுவதும் சுமார் 5 அடி உயரத்திற்கு மழை நீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. வடிகால் ஆக்கிரமிப்பு காரணமாக தற்பொழுது மழை நீர் வெளியேற முடியாமல் சுமார் இரண்டு அடி உயரத்திற்கு தெருக்கல் முழுவதும் சூழ்ந்து நிற்பதுடன் வீடுகளுக்குள்ளும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெடுங்கல் பகுதியில் 123 மில்லி மீட்டர் மழையும், போச்சம்பள்ளி பகுதியில் 97 மில்லி மீட்டரும், பெனுகொண்டபுரம் பகுதியில் 95.20 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 767.90 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக மாவட்டத்தில் 47.99 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க | தமிழ் புதல்வன் திட்டம்: யார் யாருக்கு மாதாமாதம் ரூ. 1000 கிடைக்கும்? - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News