சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவர் தனது 80 வயதான தந்தை குமரேசனை காணவில்லை என்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் ஆற்காடு சாலையில் உள்ள குமரேசனின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். பேரதிர்ச்சி..! வீடு முழுக்க ரத்த கறை படிந்து கிடந்தது. ஆனால், எங்கு தேடியும் குமரேசனை காணவில்லை. பதற்றமடைந்த போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். அப்போது குமரேசனின் மகனான குணசேகரன் மீது சந்தேகம் பார்வை விழுந்தது. அவரை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும் என நினைத்து கொண்டிருக்கும் போது குணசேகரன் தலைமறைவாகியிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதனையடுத்து முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்காக தனது தந்தையை கொலை செய்த குணசேகரன் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பேரலில் போட்டு ராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான நிலத்தில் புதைத்துள்ளதாக தெரியவந்தது. உடனே காவேரிப்பாக்கத்திற்கு புறப்பட்டுச் சென்ற போலீசார் குமரேசனின் உடல், புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர். உடலை தோண்டி எடுக்க அங்கிருந்தவர் அதிர்ந்து போனார்கள். துண்டு துண்டாக உடலை வெட்டி கொடூரமாக கொன்று புதைக்கப்பட்டிருந்தது. பின்னர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்துக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரித்தனர்.



இதற்கு நடுவே முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் குணசேகரனை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்த கொலையில் அவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனது தந்தையை கொலை செய்து அவரது உடலை புதைப்பதற்காக காவேரிப்பாக்கத்தில் குணசேகரன் சொந்தமாக இடத்தை வாங்கி போட்டதாக தெரிய வந்தது. பெற்ற தந்தையை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் புதைத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | முன்னாள் காதலனுடன் பழகிய பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய பெண்!


கொலையில் அவரது மகள்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் அவரது மகள்கள் மூவரையும் வளசரவாக்கம் போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை தீவிரமாக தேடி வந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் குணசேகரன் சரணடைந்தார். கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் மனுவை விசாரித்த பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட், 5 நாட்கள் குணசேகரனை போலீஸ் காவலில் விசாரிக்கவும், விசாரணை முடிந்து ஜீன் 10 ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் குணசேகரனை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க அழைத்து சென்றனர்.


மேலும் படிக்க | நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்து ; சொத்தை பங்கு கேட்டவருக்கு நேர்ந்த கதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR