சென்னையில் கடந்த 18ஆம் தேதி இரவு சென்னை புரசைவாக்கம் அருகே காவலர்கள் சிலர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதை தடுத்து சோதனை மேற்கொண்ட காவலர்கள், ஆட்டோவில் வந்த விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்று இரவு முழுவதும் காவல்நிலையத்தில் இருந்த விக்னேஷ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சென்னையில் அரங்கேறிய சாத்தான்குளம் சம்பவம்! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்


அதில், “சென்னை கெல்லீஸ் பகுதியில், கடந்த 18ம் தேதி வாகனச் சோதனையின் போது காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, கட்டுமான தொழிலாளியான பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்ற இளைஞர், காவல்துறையினரின் அத்துமீறிய தாக்குதல் காரணமாக மரணமடைந்துள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.  இந்த காவல்நிலைய தாக்குதல் மரணமானது சாத்தான்குளத்தில் நிகழ்ந்த காவல் சித்திரவதை தாக்குதல் படுகொலைகளை நினைவுப்படுத்துகின்றது. இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.



கடந்த ஜனவரி மாதம் தான் சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் வாகனச் சோதனையின் போது காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டது பெரும் விவாதமானது. அதனைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் காரணமாக சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, காவல்துறையினர் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என தமிழக காவல்துறை தலைவரின் அறிக்கையும் வெளியானது. ஆனாலும் அந்த அறிவுரையை காவல்துறையில் உள்ளவர்கள் காதில் வாங்கியதாக தெரியவில்லை என்பதை நடக்கும் தொடர் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.


மேலும் படிக்க | நெல்லையில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து - என்ன நடந்தது ?


சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே காவல்துறை அதிகாரிகளுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளதே தவிர அப்பாவிகளின் உயிர்களை பறிப்பதற்கு அல்ல. காவல் சித்திரவதை தாக்குதல் மரணம் என்பது மனித தன்மையற்ற செயலாகும். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் காவல் மற்றும் நீதிமன்ற காவலில் 232 பேர் உயிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கின்றது. காவல்துறையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இத்தகைய ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். 



காவல்துறை என்ற போர்வையில் மனிதாபிமானமற்ற செயல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு இடமில்லை என்பதற்கான உறுதியான சமிக்கையாக, அப்பாவிகள் மீது நிகழ்த்தும் தாக்குதல், சித்திரவதை மற்றும் காவல் மரணத்திற்கு காரணமான  காவல்துறையினரை தண்டிக்கும் உத்தரவாதம் தேவைப்படுகிறது. ஆகவே, காவல்துறை சீர்திருத்தங்கள் மற்றும்  காவல்  மரணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து  தமிழக அரசு ஆலோசிக்க வேண்டிய முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளது.


மேற்கண்ட இளைஞர் விக்னேஷ் மரண விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்வதோடு, சிபிசிஐடி விசாரணையை விரைவுப்படுத்தி குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR