சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மாணவர்கள் 10 நிமிடங்களில் 1000 வகையான ஆம்லெட்டுகளை தயாரித்து Einstein  உலக சாதனை படைத்தனர். செங்கல்பட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சமையல் கலை மாணவர்கள், அவர்களின் அசத்தலான திறன், கூட்டு முயற்சியில் மற்றும் நேரத்துக்குள் செயலாற்றும் திறன் ஆகிய தகுதிகளை வெளிப்படுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவர்களுக்கு செஃப் ராஜ்குமார் மற்றும் குழு அளித்த பயிற்சியும் வழிகாட்டுதலும் மூலம் 10 நிமிடங்களில் 1000 ஆம்லெட்டிகள் என்று நிர்ணயித்த இலக்கை 8 நிமிடம் 24 வினாடிகளில் 1200 வகையான ஆம்லெட்டுகளை தயாரித்து Einstein உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்வு, ஊடகங்கள் மற்றும் சமையல் ஆர்வலர்களுக்கு மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றது.


இந்த உலக சாதனை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியின் ஒரு முக்கியமான சாதனையாகும். இந்த சாதனை, உலகளாவிய சமையல் கலை துறையில் புதிய சாதனைகளை எட்டும் வகையில் கல்லூரியின் இடத்தை உறுதி செய்தது.



இந்த முக்கியமான நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்  அருண்ராஜ் முதன்மை விருந்தினராக கலந்துக்கொண்டு, மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்லூரியின் உலகளாவிய சமையல் திறனை மேம்படுத்தும் முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். குறிப்பாக "தமிழ்நாட்டின், சென்னைஸ் அமிர்தாவில் சமையல் கலை பயின்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அவர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என பெருமைப்படும் அளவிற்கு சென்னைஸ் அமிர்தா மாநிலத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்து வருகிறது" என்று கூறினார். 


இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த செஃப் ராஜ்குமார் மற்றும் அனைவரையும் பாராட்டிய அவர், இந்த உலக சாதனை நிகழ்ச்சியை செங்கல்பட்டில் நடத்தியது பெருமையான விஷயம் என்றும், இதுபோல பல சாதனைகளை சென்னைஸ் அமிர்தா படைக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி அளித்ததாகவும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு படிக்கின்றனர் என்பதும் நமக்கு பெருமையான விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். 


இந்த நிகழ்வில் சென்னைஸ் அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்டிட்யூஷன்ஸ் சேர்மன்  பூமிநாதன்முன்னிலையில் நடைபெற்றது. அவர் உலக சாதனை படைத்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டினார் . மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார். Einstein உலக சாதனைக்கான சான்றிதழை அதன் நிறுவனர் கார்த்திக்குமார் சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவர் பூமிநாதனிடம் வழங்கினார்.


மேலும் படிக்க | சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலா


மேலும் படிக்க | சர்வதேச விமானக் கல்லூரி தொடங்கிய சென்னைஸ் அமிர்தா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ