சென்னை: சென்னைஸ்  அமிர்தா கல்வி நிறுவனம் தனது 8th பட்டமளிப்பு விழாவினை சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் மலேசிய OUM பல்கலைக்கழகத்தில் தொழில்சார் டிப்ளோமா மற்றும் நிர்வாக டிப்ளோமா சான்றிதழ்களை 250 மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னைஸ் அமிர்தா கல்வி  நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் முன்னணியில் உள்ள OUM பல்கலைக்கழகத்துடன் 2012 முதல் இணைந்து 10000 மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி உலகளவில் பணியில் அமர்த்தி வெற்றி பெற்றுள்ளது.  


OUM பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அஹ்மத் இசானி அவாங், செங்கல்பட்டு, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிழைகளில் பட்டயப்படிப்பு பயின்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார் 


"எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் கல்வியின் பங்கை வலியுறுத்தினார், சென்னைஸ் அமிர்தாவின் கல்விச் சிறப்பையும்  மற்றும் மாணவர்களின் முழுமையான மேம்பாட்டிற்காகப் நிறுவனத்தின் பங்கையும்  பாராட்டினார். மாணவர்கள் தங்கள் திறமைகளை சமூக நலனுக்காக பயன்படுத்துமாறு அவர் ஊக்குவித்தார்.


மேலும் படிக்க | அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய்க்கு திவாலக்கியது அதிமுக - அமைச்சர் பிடிஆர்


இன்றைய பட்டமளிப் விழாவில் 300 மாணவர்கள் பட்டம் பெற்றார்கள். OUM பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் அதிக முக்கியத்துவம் கிடைக்குது. கிட்டத்தட்ட 6000 பேருக்கு மேலான மாணவர்கள் உலகம் முழுவதும் பணியில் இருக்கிறார்கள்.


சமீபத்தில் அமெரிக்க நாட்டில் பணிபுரிய  2 லட்சம் சம்பளத்தில் நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க. படிக்கும்போதே 6 மாதம் பயிற்சி பெற  வாய்ப்பு இருக்கு. ஸ்டூடன்ட் எக்சேஞ்ச் ப்ரோக்ராம் மூலமா இங்க படிக்கக்கூடியமாணவர்கள் மலேசியா சென்று படிக்கக்கூடிய பொன்னான வாய்ப்பு இந்த பேட்சுக்கு கிடைச்சிருக்கு.


இந்நிகழ்ச்சியில் மலேசியாவின் OUM பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்/துணை இணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் யோன் ரோஸ்லி டாட் திரு. முகமட் யசெட் பஹாமன், டைரக்டர் குரூப் ஆஃப் மார்க்கெட்டிங் OUM மலேசியா; திரு கலையரசன், Chairman Future Dream Academy மலேசியா; திரு. ஜெய் நானக் சிங், CEO, Future Dream Academy மற்றும் சென்னையிஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் பிரமுகர்கள் திரு. லியோ பிரசாத், தலைமை கல்வி இயக்குனர், டாக்டர் டி. மில்டன், டீன், மற்றும் பல்கலைக்கழக விவகாரத் தலைவர் திருமதி. பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | விஜய் பிறந்தநாளில் சாகசம் செய்த சிறுவன்... கையில் பற்றிய தீயினால் பரபரப்பு


மாணவர்களை  வாழ்த்தி பேசிய சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர்.பூமிநாதன், "எங்கள் பட்டய படிப்பு முடித்த மாணவர்களின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் திறமைகளை வளர்ப்பதற்கும், விருந்தோம்பல் துறையில்  வருங்கால தலைவர்களை தயார்படுத்துவதற்கு சென்னைஸ் அமிர்தாவின் அர்ப்பணிப்பு என்றும் தொடரும் என்று கூறினார். நிறுவனத்தின் மதிப்புகளான புதுமை, இரக்கம் மற்றும் professionalism  ஆகியவற்றை நிலைநிறுத்த மாணவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.


சென்னை அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி நகரின் மையப்பகுதியான ஆயிரம் விளக்கு மெட்ரோ அருகே மவுண்ட் ரோட்டில் 40,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இது உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. சர்வதேச விமான நிலைய சூழலையும் கொண்டுள்ளது.


மாணவர்கள் தங்கள் எதிர்கால பணியிட சூழலை இங்கே கற்கும் போதே அனுபவிப்பதை இது உறுதிசெய்கிறது. விமான வடிவில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சிறந்த நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்காக இங்கு ஆய்வகங்கள் விமானப் போக்குவரத்து துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | நீங்கள் அழித்தால் நாங்கள் காய்ச்சுவோம்...! போலீசார் உடன் மல்லுக்கட்டும் சாராய வியாபாரிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ