TN Assembly 2024 : அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய்க்கு திவாலக்கியது அதிமுக - அமைச்சர் பிடிஆர் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய் அளவுக்கு அதிமுக ஆட்சி திவாலாக்கி வைத்திருந்ததாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 22, 2024, 02:19 PM IST
  • அரசு கேபிள் டிவி நிறுவனத்தை திவாலாக்கியது அதிமுக
  • 200 கோடி ரூபாய் கடனில் தத்தளிக்க விட்டு சென்றனர்
  • சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் குற்றச்சாட்டு
TN Assembly 2024 : அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய்க்கு திவாலக்கியது அதிமுக - அமைச்சர் பிடிஆர் பகிரங்க குற்றச்சாட்டு title=

அமைச்சர் பிடிஆர் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்தில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க அரசு முன்வருமா என செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு எழுப்பிய கேள்விக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அவர் பேசும்போது, " கேபிள் டிவி  ஆபரேட்டர்களுக்கு தனி நல வாரியம் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த வாரியம் செயல்படாமல் இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் அனைத்து கேபிள் தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த நலவாரியத்தை மறுசீரமைப்பு செய்து வாரியத்திற்கு தலைவர், உறுப்பினர் செயலர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | 'தவறான மருந்தை சொல்கிறார் மா.சுப்பிரமணியன்' - கொந்தளித்த இபிஎஸ்... என்ன விஷயம்?

அதிமுக ஆட்சியில் படுமோசம்

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஒரு காலத்தில் 70 லட்சம் இணைப்புகள் செயல்பாட்டில் இருந்தன. இந்த துறையே பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி அனலாக் சிக்னல் இருக்க கூடாது, டிஜிட்டல் சிக்கனல் தான் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்த அதிமுக அரசு வெறும் 36 லட்சம் செட் ஆப் பாக்ஸ் மட்டுமே வாங்கினர். இதனால் 70 லட்சம் இணைப்புகள் பாதியாக குறைந்துவிட்டது.

அரசு கேபிள் டிவி திவால்

அதிமுக ஆட்சி மாறும் போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி 200 கோடி ரூபாய் திவாலான நிறுவனமாக தான் கொடுக்கப்பட்டது. பல ஆப்பரேட்டர்கள் மற்றும் டிவி கம்பெனிகளுக்கு பல கோடி பணம் தர வேண்டி இருந்ததால் அதை படிப்படியாக சீரமைத்து நிர்வாக குளறுபடிகள் திமுக ஆட்சியில் சரி செய்து திருத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் அனைத்து HD பாக்ஸ் கொண்டு வருவதற்கும் ஏற்பாடு செய்து, அதற்கான அடிப்படை கட்டமைப்பு செய்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி  மீண்டும்  உச்சத்தை நோக்கி பயனடையும் வழியில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த சேவையில் HD செட் ஆப் பாக்ஸ் அரசு கேபிள் டிவி மூலம் வழங்கப்படும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | நீங்கள் அழித்தால் நாங்கள் காய்ச்சுவோம்...! போலீசார் உடன் மல்லுக்கட்டும் சாராய வியாபாரிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News