பேருந்து ஓட்டுநர்களுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படும் நிகழ்வுகள் பயணிகளை அச்சுறுத்தக்கூடியவை. ஆனாலும், எத்தனையோ சம்பவங்களில் சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்கள், பத்திரமாக பேருந்தை நிறுத்தி மருத்துவமனை நோக்கி சென்றுவிடுவர். சிலர், நிலைமையை உணர்ந்து பாதுகாப்பாக வண்டியை நிறுத்திவிடுவதுண்டு. ஈரோட்டில் இருந்து திருப்பூர் வரை செல்லும் அரசு பேருந்தை ஓட்டுனர் பழனிச்சாமி ஓட்டிச்சென்றுள்ளார். திண்டல் அருகே சென்ற போது ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சுதாரித்த ஓட்டுநர் பழனிச்சாமி, பேருந்தை பாதுகாப்பாக நிறுத்த முயன்றார். ஆனாலும் நெஞ்சுவலி காரணமாக முடியாததால் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இதயத்தில் ஏற்படும் ரத்தக்கட்டிகள் கண்டுபிடிப்பது எப்படி? இதோ அறிகுறிகள்


இதனால் அலறிய பயணிகள், உடனடியாக ஓட்டுநர் பழனிச்சாமியை டிரைவர் சீட்டில் இருந்து இறக்கினர். அந்த வழியாக சென்ற வாகனங்களை மடக்கிய பயணிகள், கார் ஒன்றில் பழனிச்சாமியை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பயணிகளை வேறொரு அரசுப் பேருந்தில் திருப்பூருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருகும் எந்தவித காயங்களோ, அசத்பாவிதங்களோ நடக்கவில்லை. 


பொதுவாக பயணங்களில் இதுபோன்று நெஞ்சு வலி ஏற்படுபவர்களுக்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். பலருக்கு பயணத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதனால் பேருந்து விபத்துக்குள்ளாகி பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. மாரடைப்பு ஏற்படும் போது அவசரத் தேவைக்கு பேருந்தில் எப்போதும் அதற்கான மருந்துகளை வைத்துக் கொள்வது ஓட்டுநருக்கு மட்டுமல்லாமல் பயணிகளுக்கும் நல்லது என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.  


மேலும் படிக்க | தொடர்ந்து நீண்ட நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் வரும் அபாயம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR