சென்னை: அரசு மருத்துவர்களின் தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, வீடு வழங்கும் ஆணை, அரசு வேலைக்கான பணி ஆணை மற்றும் நிவாரணத் தொகை உள்ளிட்டவை வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வியாசா்பாடியை சோ்ந்த 17 வயதான கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவின் காலில் தசைநார் கிழிந்தததை அடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டு வலி குறையாததால், கடந்த 10 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு உயா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைநார்கள் அழுகிய நிலையில் இருப்பதால், வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்ற வேண்டும் எனக்கூறி, அவரின் வலது கால் துண்டிக்கப்பட்டது. 


அதன் பின்னர் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் (RGGGH) சிகிச்சை பெற்று வந்த மாணவியின் பல உடல் உறுப்பு செயலிழந்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 15) காலை மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை, மாணவி பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் உடனடியாக அரசு தரப்பில் மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க: கால்பந்து வீராங்கனை மரணம் - 2 டாக்டர்கள் சஸ்பெண்ட் ; சிகிச்சையில் குளறுபடியா?


இந்நிலையில், இன்று காலை உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, வீடு வழங்கும் ஆணை, அரசு வேலைக்கான பணி ஆணை மற்றும் நிவாரணத் தொகை உள்ளிட்டவை வழங்கினார்.


அதன்பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், "கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும். நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்-க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது" என தனது ட்விட்டர் பதிவில் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க: ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ