இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இந்த தொற்றின் அபாயம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்று பல்வேறு மாநில அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்திலும் இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் மாணவ மாணவியர்களுக்கு 12-ம் வகுப்பு (Plus 2 Exam) பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதன்படி, பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


ALSO READ | CBSE 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து


இதற்கிடையில் நேற்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு (CBSE Board Exams 2021) பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி மாலை அறிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சிபிஎஸ்இ தலைவர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில், இன்று மாலை  நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


எனவே சிபிஎஸ்இ பொதுத்தேர்வை வைத்தே தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் பொதுத்தேர்வு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் பொதுத்தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR