தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு.. தமிழக மக்களிடம் ஓட்டு கேட்பது நியாயமா? ஸ்டாலின் விளாசல்
DMK MK Stalin Slams Modi Government: தமிழ்நாடு மக்கள் வெள்ளத்தில் பாதித்து தவிக்கும் போது பார்க்க வராத பிரதமர் மோடி, ஓட்டு கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Latest Updates: இன்று ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்க பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தங்க சாலையில் நடைபெற்ற வளர்ச்சித் திட்ட பணிக்கான விழாவில் முதல்வர் உரையாற்றும் போது, "சென்னை வெள்ளத்தில் மிதந்த போது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர் மோடி, ஓட்டு கேட்டு மட்டும் தமிழகம் வருவது நியாயமாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்? ஸ்டாலின் கேள்வி
அந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "பாஜக ஆளும் மாநிலம் என்றால் உடனே நிதி தரும் பிரதமர் மோடி, தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் நிதி வழங்கவில்லை. இதை கேட்டால், நம்மை பிரிவினைவாதி என கூறுகிறார்கள்.
மத்திய அரசுக்கு அதிக வரியை தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் வரிக்கு ஏற்ப நமக்கு வரி கொடுப்பதில்லை. நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசாதான் திருப்பித் தருகிறார்கள். அதையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா? ஏன் இந்த பாரப்பட்சம்? ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம். நாங்கள் பிரிவினை பேசவில்லை. எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடம் எடுக்க தேவையில்லை' என கடுமையாக மோடி அரசை சாடினார்.
மேலும் படிக்க - 'தேர்தல் நேரம்... CAA மூலம் கரையேற பார்க்கிறார் பிரதமர்' - ஸ்டாலின் கடும் சாடல்!
வடசென்னை தான் என்னை முதல்வராக்கியது -ஸ்டாலின்
திராவிட மாடல் அரசு சென்னையை நவீன நகரமாக மாற்ற நாள்தோறும் புதிய புதிய திட்டங்களாக நிறைவேற்றுகிறது. சென்னையை மிகச்சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன். என்னை எம்எல்ஏவாகவும், மேயராகவும், துணை முதல்வராகவும், தற்போது முதல்வராகவும் ஆக்கியது இந்த வடசென்னை தான் என்றார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக - பாஜக எதுவும் செய்யவில்லை
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னை எப்படி வெள்ளத்தில் முழ்கியது? சென்னை மட்டுமா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிதிநிலைமையும் மூழ்கடித்துவிட்டு சென்றார்கள். அவர்களைப் போன்று தான் 10 ஆண்டு கால பாஜக ஆட்சியும் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை. சென்னையின் அனைத்து வளர்ச்சி பணிகளும் திமுக உருவாக்கியதுதான் என்றார்.
மேலும் படிக்க - தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி ரத்து... அண்ணாமலை கூறியது வதந்தி - உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ