தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான கேள்வி, பதில் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். எதிர்கட்சித் தலைவராக இருந்த போது முதல்வராக செயல்பட்ட மு.க.ஸ்டாலின், தற்போது முதல்வராக வந்த பின் பிரதமராக செயல்படுகிறார் என்று சமூக வலைதளங்களில் பேசப்படுவதை உண்மையாக்கி வருவதாக புகழாரம் சூட்டினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 68,375 கோடி ரூபாய் முதலீடு; 2,05,802 நபர்களுக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


குறிப்பாக, உக்ரைனில் இருந்த மாணவர்களை மீட்டதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரைப் போல செயல்பட்டார் என்றும், துபாய் சென்று முதலீடுகளை ஈட்டிய போது பிரதமராகவே வெளிப்பட்டார் என்றும் பாராட்டினார். முதல்வரின் திராவிட மாடல் அரசியலை அகில இந்திய தலைவர்கள் வழிமொழிவதாக குறிப்பிட்ட ஆளூர் ஷாநவாஸ், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் அற்புதமான திட்டத்தைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிதி ஒதுக்குவதில் எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் செலவு கணக்கு பாருங்கள் ஆனால் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைக்கு மட்டும் செலவு செய்வதை கணக்கு பார்க்க வேண்டாம் என முதல்வருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மாதிரிப் பள்ளிகள் உருவாக்குவதில் குறிப்பிட்ட சில பள்ளிகள் என்று இல்லாமல் பாரபட்சமின்றி சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி எல்லா பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்றும் ஷாநவாஸ் வலியுறுத்தினார்.


மேலும் படிக்க |ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்..!


அதேபோல், பல்கலைக்கழகங்களில் பணியிடங்களை நிரப்புவதில் சமூக நீதியை பாதுகாக்க இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய ஆளூர் ஷாநவாஸ், ஐஐடி நிறுவனம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்தாலும் தமிழ் மண்ணில் இயங்குவதால் அங்கேயும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி இயங்கிவரும் பள்ளியில் ரம்ஜான் நோன்பு இருந்த இஸ்லாமிய மாணவர்களையும் உணவருந்த சொல்லி ஆசிரியர் வற்புறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், தமிழகம் முழுவதும் இந்த மாதிரியான வகுப்புவாத சிந்தனைகள் தடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 


மேலும் படிக்க | திமுக ஆட்சியில் வெளிநாட்டு முதலீடு 41.5% உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


அதேபோல், பள்ளி மாணவர்கள் பேருந்து படியில் பயணம் செய்வது அதிகரித்து  வருவதை வேதனையுடன் குறிப்பிட்ட அவர், இதனைத் தடுக்கப் பள்ளி நேரங்களில் தமிழக அரசு அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தனது தொகுதி நிலவரம் குறித்துப் பேசிய ஆளூர் ஷாநவாஸ், நாகூரில் மகளிர் கல்லூரியும்,சட்டக்கல்லூரியும் அமைத்துத் தரவேண்டும் என்று வலியுறுத்தினார். நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள பழுதடைந்த பள்ளிகளையும் சீரமைத்து தர வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR