திமுக ஆட்சியில் வெளிநாட்டு முதலீடு 41.5% உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசுத்துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிப்பதற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 6, 2022, 12:27 PM IST
  • மீண்டும் தொடங்கியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்
  • மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது
  • 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
திமுக ஆட்சியில் வெளிநாட்டு முதலீடு 41.5% உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  title=

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. முதல் நாளான இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். 

காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கிய கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் மக்களுக்கு நேரடியாக வாரிசு அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சேர்த்து 3 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் படிக்க | டெல்லி : பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

இதைத்தொடர்ந்து 110-விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:- 

திமுக அறிவித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெறவுமே துபாய் பயணம் சென்றேன். எரிசக்தி, சரக்கு போக்குவரத்து திட்டங்கள், மின்னணுவியல் திட்டங்களில் பெருமளவு முதலீட்டை ஈர்க்க துபாயில் உரையாடினேன். துபாய் பயணத்தின் மூலம் ரூ.6100 கோடி முதலீட்டால் தமிழ்நாட்டில் 15,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திமுக அரசு பதவி ஏற்ற பிறகு தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீடு 41.5% சதவீதமாக அதிகரித்துள்ளது. டி.பி.வேர்ல்டு, சாம்சாங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 10 மாதங்களில் ரூ.68,375 கோடி ரூபாய் முதலீட்டை திமுக அரசு ஈர்த்துள்ளது. இதன் மூலம் 2.05 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். விரைவில் முதலீடு தொடர்பாக பணிக்குழு ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும். அடுத்த கட்டமாக 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நடக்க இருக்கும் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்தர கூட்டத்திலும்,  ஜெர்மனி நாட்டில் நடக்கும் நிகழ்விலும், ஜூன் மாதத்தில்  இங்கிலாந்தில் நடைபெற உள்ள நிகச்சியிலும் , ஜூலை மாதத்தில் அமெரிக்காவிலும் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டின் தொழில் வளர்சிக்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகள்  ஏற்கனவே தொடங்கிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும் படிக்க | சாதி, மத மோதல்களுக்கு சமூக வலைதளங்களே காரணம் - மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News