இரண்டாம் போக பாசனத்திற்காக ஆழியாறு அணை திறப்பு!
பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக கோயம்பத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்!
பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக கோயம்பத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தனக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம் போக பாசனத்திற்கு 28.11.2018 முதல் 15.4.2019 முடிய 139 நாட்களுக்கு ஆழியாறு அணையிலிருந்து 961 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தான் ஆணையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்!