கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், வாரியங்கள், பொதுமக்களிடமிருந்து நிதியுதவி வந்துள்ளது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஐடிசி நிறுவனம் ரூ.1.59 கோடி செலவில் நிவாரணம் வழங்கியுள்ளது. மே 15 ஆம் தேதி முதல் நேற்றுவரை 10 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் விவரமும் வெளியீடப்பட்டுள்ளது. 


கொரோனா – பொது நிவாரண நிதி குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80 (G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது.


READ ALSO | எந்தவொரு தேர்வும் / நேர்காணலும் இன்றி அரசு வேலை பெற இப்போதே விண்ணப்பிக்கவும்..!


அதன்படி,  தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், வாரியங்கள், பொதுமக்களிடமிருந்து நிதி யுதவி வந்துள்ளது. சமீபத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ITC நிறுவனம் ரூ.1.59 கோடி செலவில் நிவாரணம் வழங்கியுள்ளது.
மே 15ஆம் தேதி முதல் நேற்றுவரை 10 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் விவரமும் வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை ரூ.394 கோடி கிடைத்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.