கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் கிறிஸ்துமஸ் விழாவாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிறிஸ்துமஸ் (Christmas the celebration of Jesus Chirst's brithday) விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நள்ளிரவில் 12மணிக்கு ஆயர் ஸ்டீபன் அண்டனி தலைமையில் ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இந்த திருப்பலியில் உலக நன்மைக்காக சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி உற்சாகத்துடன் கொண்டாடினர்.


ALSO READ | கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக மாற்ற வரும் 3 படங்கள்!


இதே போல தூத்துக்குடியில் உள்ள முக்கிய தேவாலயங்களான, திரு இருதய மேற்றிராசன ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், தூய பேட்ரிக் தேவாலயம், தூய பேதுருதேவாலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் இரவு 11.30 மணியிலிருந்தே மக்கள் வரத் துவங்கினர். புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் கேரல் பவனி நடைபெறுவது வழக்கம். வாகனங்களை வண்ண விளக்குகளாலும் அலங்கார கலைப்பொருட்களாலும் அலங்கரித்து துள்ளல் இசை ஒலிக்க இளைஞர்கள் இசைக்கேற்ப ஆடிப்பாடி நகரின் முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவார்கள். ஆனால் ஒமிக்ரான் பரவல் மற்றும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கேரல் பவனிக்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக அந்தந்த தெருக்களில் மினிவாகனங்களில் கிறிஸ்துமஸ் கேரல் பவனிகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கவும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும் போலீஸார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் கிறிஸ்துமஸ் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட களமிறங்கும் படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR