கிறிஸ்துமஸ் தினத்தை சிறப்பாக மாற்ற வரும் 3 படங்கள்!

கிறிஸ்துமஸ் தினத்தன்று 3 பெரிய படங்கள் வெளியாக உள்ளன.

 

இந்த வருட கிறிஸ்துமஸ் தினத்தில் திரையரங்கை தாண்டி OTT-யில் அதிக படங்கள் வெளிவரவுள்ள.  அதில் அதிகம் எதிர்பார்க்கபடும் 3 முக்கிய படங்கள்.

 

1 /3

மின்னல் முரளி பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள  'மின்னல் முரளி' திரைப்படம் வரும் 24ம் தேதி Netflix-ல் வெளியாக உள்ளது.  இதில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஹீரோ பட பாணியில் உருவாகி வரும் இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

2 /3

அத்ரங்கி ரே ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'அத்ரங்கி ரே'.  இது ஒரு ஹிந்தி திரைப்படம் என்றாலும் தனுஷ் நடித்து இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.  இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  வரும் 24ம் தேதி hotstar-ல் வெளியாக உள்ளது.

3 /3

பிளட் மணி நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஐரா' திரைப்படத்தின் இயக்குனர் சர்ஜூன், அடுத்ததாக நடிகை பிரியா பவானி சங்கரை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து இயக்கியுள்ள படம் 'பிளட் மணி' சஸ்பென்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படமும் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 24-ந்தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.