சென்னை: மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய அறிவிப்பு குறித்து தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுத்துள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாணவர்களின் நலன் கருதி 10 ஆம் வகுப்பு (Class 10 Exams) மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அறிவித்தார். 11 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று தலைமை செயலகத்தில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami), ஜூன் 15 முதல் தேர்வுகள் எழுத வரிசையில் இருந்த அனைத்து மாணவர்களும் 11 ஆம் வகுப்புக்கு உயர்த்தப்படுவார்கள் என்று கூறினார். மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 80% மதிப்பெண்கள் காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வுகளில் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் மற்றும் அவர்களின் வருகையின் அடிப்படையில் 20% மதிப்பெண்கள் வழங்கப்படும்.


READ | ஜூன் 15 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது: HC


பொதுத்தேர்வுகளை மூன்று முறை ஒத்தி வைத்த தமிழக அரசாங்கத்தின் (TN Govt) முக்கிய முடிவு வந்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முதலில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 13 வரை திட்டமிடப்பட்டன. இருப்பினும், மார்ச் 24 அன்று நாடு தழுவிய அளவில் ஊரடங்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் அறிவித்தார்.


இருப்பினும், இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பரீட்சைகளை நடத்துவதற்கு என்ன அவசரம் என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியது. 


சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எதிர்வரும் மாதங்களில் COVID-19 நிலைமை மோசமடையும் என்றும், அதற்கு முன்னதாகவே திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என வாதம் செய்தது.


READ | மாணவர்களின் நலன் தான் முக்கியம்; 10-ம் வகுப்பு தேர்வுத் தள்ளி வையுங்கள்: திமுக


அதன்பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள், அதாவது, 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? பொதுமுடக்க காலத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம்? பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை நீங்களே மீறுவீரர்களா? லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? பொது மடக்க காலத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள்? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்..