தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிப்பு!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பை வரும் 13 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும், ஆன்லைன் வழி வகுப்புகளை பெறக்கூடிய வகையில் அனைத்து மாணவர்களிடம் ஸ்மார்ட்போன், இணையவசதி உள்ளிட்ட கட்டமைப்பு இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; TV மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


கோவிட்-19 பரவாமல் தடுப்பதற்காக 4 மாத காலமாக அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்களும் கல்வித்துறையும் தான். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யாராலும் உறுதியாக கூற முடியவில்லை. உயர்நிலைக் கல்வித்துறையில் இறுதி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவிக்க முடியவில்லை மிகவும் பாதிக்கப்பட்ட துறையாக கல்வித்துறை உள்ளது.


READ | தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு!


இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... "தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும். +2-ல் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது. 12 ஆம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.  விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம்" என அவர் கூறினார்.