ராணிப்பேட்டையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர் வீட்டிற்குச் சென்று விளம்பரம் தேடிக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ள எனக்கு இனி எதற்கு விளம்பரம் எனக் குறிப்பிட்டு பேசினார். நரிக்குறவர் வீட்டுக்கும், இருளர் வீட்டுக்கும் சென்றதன் மூலமாக, ‘இது நமது அரசு’ என்ற நம்பிக்கையை, அவர்கள் மனதில் விதைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய ஆட்சியைப் போல் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் புத்தகப் பைகளில் எனது புகைப்படத்தை போட்டுக்கொண்டிருந்தால் அதை விளம்பரம் எனக் கூறலாம். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான புத்தகப் பைகள் வீணாகக் கூடாது என்பதற்காக , திமுக அரசு அமைந்த பின்னும் முந்தைய முதலமைச்சர்களின் படங்கள் அச்சடிக்கப்பட்ட பைகளை விநியோகிக்கக் சொன்னவன் இந்த ஸ்டாலின். விளம்பரங்கள் எனக்குத் தேவையில்லை. ஏற்கனவே கிடைத்த புகழையும் பெருமையையும் காலமெல்லாம் கரையாமல் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான். 


மேலும் படிக்க | திமுக அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும் ; நாங்கள் பங்காளிகள் - கே.பி.முனுசாமி அதிரடி


‘திராவிட மாடல்’ என்று சொன்னால், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொன்னால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது யார் ஆட்சிக் காலத்தில் அமலானது எனக் கேட்கும் போதெல்லாம் இந்த ஸ்டாலினின் முகம் தான் நினைவுக்கு வரும். 


27% இடஒதுக்கீட்டை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தது,  தமிழ்நாட்டின் அம்பேத்கரான பெரியாருக்கும், இந்தியாவின் பெரியாரான அம்பேத்கருக்கும், அவர்களது பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், சமத்துவ நாளாகவும் அறிவித்தது யார் என்று கேட்டால் என் முகம் தான் நினைவுக்கு வரும். 


கையில் காசு இல்லை என்றாலும் போகவேண்டிய இடத்திற்கு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையுடன், பேருந்தில் ஏறும் பெண்களுக்கு என்றும் என் முகம் தான் நினைவுக்கு வரும். நான் என்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. நாம் அனைவரும் சேர்ந்த கூட்டுக் கலவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். 


மேலும் படிக்க | 'அன்புள்ள அண்ணன்... உங்கள் செயல்கள் ஏற்புடையதாக இல்லை' - ஓ.பி.எஸ்க்கு இ.பி.எஸ் பதில் கடிதம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR