தமிழ்நாட்டில் திருச்சி, திருவாரூர், அரியலூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே கோடை வெப்பத்தால் புழுங்கிக்கிடந்த மக்கள் மின்வெட்டு காரணமாக மேற்கொண்டு அவதியடைந்தனர்.அதுமட்டுமின்றி பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.



இந்தச் சூழலில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. 


மேலும் படிக்க | நாகை: சாப்பிட்ட பிரியாணிக்கு காசு தர மறுப்பு - கேள்வி கேட்டதால் கடையை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்!


இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  


 



இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என நேற்று பதிவிட்டிருந்தார்.


 



இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளதாகவும் இதனால் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


அதுமட்டுமின்றி ஒன்றிய அரசி மின்சாரம், நிலக்கரி, ரயில்வே ஆகிய மூன்று துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.



இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மூன்று யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 3 மணி நேரம் திடீர் மின்வெட்டு - இது தான் காரணமா?


மொத்தமுள்ள ஐந்து யூனிட்டுகளில் தற்போது இரண்டு யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுவதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR