கையில் சிலம்பம்; கால்கள் பின்னோக்கி... சாதனை படைத்த கோவை சிறுவன்
கோவையை சேர்ந்த சிறுவன் கையில் சிலம்பம் சுற்றியபடி 23 கிலோமீட்டர் பின்னோக்கி ஓடி சாதனை படைத்துள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, சாந்தி தம்பதியினரின் மகன் ரித்திக் பிரணவ் .11 வயதான சிறுவன் ரித்திக் அதே பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் சிறு வயதே முதலே சிலம்பம் உள்ளிட்ட கலைகளை கற்று வருகிறார்.
இந்நிலையில் சிலம்பம் சுற்றுவதில் புதிய சாதனையாக கையில் ஒற்றை சிலம்பம் சுற்றியபடி,பின்னோக்கி 23 கிலோ மீட்டர்கள் ஓடி இந்தியன் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவன் ரித்திக் காலை ஆறு மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து சிலம்பம் சுற்றி, பின்னோக்கி ஓடினான்.சாதனை சிறுவனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைகளை தட்டி ஊக்கமளித்தனர்.
மேலும் படிக்க | இதுவும் காப்பியா?... அட்லீயை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சாதனை சிறுவன் ரித்திக்கிற்கு தீர்ப்பாளர் பிரகாஷ் ராஜ் மற்றும் நிறுவனர் சதாம் உசேன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர். மேலும் இந்தச் சாதனையை படைத்த சிறுவனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR