இதுவும் காப்பியா?... அட்லீயை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஜவான் படத்தின் டீசரை வைத்து அட்லீயை நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 4, 2022, 05:27 PM IST
  • ஜவான் டீசர் வெளியானது
  • அட்லீயை கலாய்க்கும் நெட்டிசன்கள்
 இதுவும் காப்பியா?... அட்லீயை கலாய்க்கும் நெட்டிசன்கள் title=

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தது. அதனையடுத்து விஜய்யுடன் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி கோடம்பாக்கத்தின் மோஸ்ட் வான்டட் இயக்குநர் என்ற பெயரை பெற்றார்.

இதனையடுத்து அவர் பாலிவுட் பாஷா ஷாருக் கானை வைத்து படம் இயக்குவதற்கு கமிட்டானார். அந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துவருகிறார். பான் இந்தியா படமாக இது உருவாவதாலும், மணிரத்னத்துக்கு அடுத்து ஷாரூக் கானை வைத்து ஒரு தமிழ் இயக்குநர் இயக்குவதாலும் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

sharukh

'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நீண்ட நாள்களாக உருவாகிவரும் இப்படத்தின் அப்டேட் வெளியாகாமல் வெளியாகாமல் இருந்தது.

இந்தச் சூழலில் அட்லீ - ஷாருக் படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஜவான் டீசரை யூ ட்யூபில் ஒன்றரை கோடி பேர் இதுவரை பார்த்திருக்கின்றனர். இதனால் ஷாருக் ரசிகர்களும், அட்லீ ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.,

இந்நிலையில் அட்லீ படங்கள் வழக்கமாக சந்திக்கும் விமர்சனங்களை ஜவானும் சந்தித்துள்ளது. அதாவது, அந்த டீசரில், ஷாருக்கான் தன் முகத்தை ஒரு துணியால் மறைத்துக்கொண்டு தோன்றுவார். 

sharukh

அதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஜவான் டீசர், ஷாம்ரேமி இயக்கத்தில் 1990-ஆம் ஆண்டு வெளியான 'டார்க்மேன்’ படத்தை ஒத்திருப்பதாக கூறிவருகின்றனர்.

 

அதுமட்டுமின்றி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படத்தையும் ஜவான் டீசர் ஒத்திருப்பதாக கூறும் அவர்கள், இந்தப் படமும் காப்பியா என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

மேலும் படிக்க | கமலின் ‘விக்ரம்’: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? - # Vikram Box Office Report

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News