கோயம்பத்தூர் (Coimbatore) மாவட்ட ஆட்சியர் (District Collector) கெ.ராஜாமணியின் (K.Rajamani) கோவிட்-19 (Covid-19) பரிசோதனை நேர்மறையாக வந்ததடையடுத்து கோவை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திங்கட்கிழமையன்று அவருக்கு லேசான காய்ச்சலும் தொண்டை கரகரப்பும் இருந்தது என கூறப்படுகிறது. செவ்வாயன்று அவர் நாசி ஸ்வாப் மாதிரிகளை பரிசோதனைக்கு அளித்தார். செவ்வாயன்று மாவட்ட ஆட்சியருக்கு குளிரும் அதிகமாயிற்று. செவ்வாயன்று இரவு பரிசோதனை முடிவுகள் வந்தன. அதன் பின்னர் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


செவ்வாய் இரவு, உடல் பரிசோதனை மற்றும் சி.டி.ஸ்கேன் செய்துகொள்ள மாவட்ட ஆட்சியர் KMCH-க்கு சென்றார். அறிகுறி எதுவும் தென்படாததால் அவர் செவ்வாயன்று வீடு திரும்பினார். எனினும், இன்று காலை அவர் மருத்துவமனையில் போய் சேர்ந்தார்.


இப்போதும் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் உடல் சோர்வு மட்டுமே உள்ளது என்றும் மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அவரது அலுவலகம், முதல் தளத்தில் அவர் அலுவலகம் இருக்கும் பகுதி மற்றும் அவர் அலுவலகத்தை அடைய பயன்படுத்தப்படும் காரிடர் ஆகிய இடங்கள் சுத்திகரிப்புக்காக மூடப்பட்டுள்ளன.


கடந்த மூன்று நாட்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் சோதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் யாருக்காவது தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களது குடும்ப நபர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதிக்கப்படுவார்கள்.


ALSO READ: கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: MKS