Coimbatore Diwali Special Gifts For Fireworks: கோவையில் தீபாவளி பட்டாசு விற்பனையில் அறிவித்த சிறப்பு பரிசுகளுக்கான  குலுக்கல் நடைபெற்றது. இதில் ஸ்கூட்டர், கியர் சைக்கிள், மிக்ஸி மற்றும் வெள்ளி நாணயங்களை பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க பெற்று சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி பண்டிகை கடந்த அக். 31ஆம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை கொண்டாட்டத்தில் இனிப்புகள், பலகாரங்களை தவிர்க்கவே முடியாது. புத்தாடை எடுத்து தீபாவளி அன்று மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்து அதை உடுத்தினால்தான் பலருக்கும் தீபாவளி கொண்டாட்டமே ஆரம்பிக்கும். 


அதேபோல், தீபாவளி என்றாலே பட்டாசை தவிர்க்க முடியாது. பட்டாசு வாசனை காற்றில் மிதந்தால் தான் பலருக்கும் அந்த தீபாவளியே முழுமை பெறும் எனலாம். புத்தாடை, இனிப்பு, பலகாரம் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தொடக்கப்புள்ளி என்றால் பட்டாசுதான் முற்றுப்புள்ளி. ஊர் முழுவதும் இரவில் பட்டாசு வெடிப்பதை பார்ப்பதும் தனி சுகம்தான்.


அந்த வகையில், கோவையில் பட்டாசு விற்பனை அமோகமாக நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை சிறிதளவு அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. விற்பனை அதிகமானதற்கு புதிய பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது ஒரு காரணம் என்றாலும், குறிப்பாக சில கடைகளில் அறிவித்த கவர்ச்சிகரமான பரிசு திட்டங்களும் ஒரு காரணம் என்கின்றனர் கோவையின் பட்டாசு வியாபாரிகள். ஆம், இந்த தீபாவளி பட்டாசு விற்பனையின் போது பல்வேறு கடைகள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்குவதாக அறிவித்திருந்தன.


மேலும் படிக்க | ஒரே மேடையில் சந்திக்க போகும் விஜய் - திருமாவளவன்! அதுவும் இந்த விழாவில்?


குறிப்பாக கோவை வடவள்ளி பகுதியில் உள்ள சக்சஸ் என்ற பட்டாசு கடையில் 2500க்கும் மேல் பட்டாசு வாங்கும் நபர்களுக்கு குலுக்கல்  முறையில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர், சைக்கிள், மிக்ஸி, வெள்ளி நாணயங்கள் என சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தீபாவளி முடிந்த நிலையில், பரிசு கூப்பன்களை பெற்று சென்ற வாடிக்கையாளர்கள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.


இந்நிலையில், அந்த குலுக்கலில் கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் முதல் முதல் பரிசாக டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை தட்டி சென்றார். தொடர்ந்து நடைபெற்ற குலுக்கலில் சைக்கிள், மிக்ஸி, வெள்ளி நாணயங்கள் போன்ற பரிசுகளை பொதுமக்கள் மகிழ்ச்சியாக பெற்று சென்றனர். முதல் பரிசாக ஸ்கூட்டர் பரிசு பெற்ற இளைஞர் மகிழ்ச்சியுடன் ஸ்கூட்டரை ஓட்டி சென்றது பார்ப்பாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 


இது குறித்து பட்டாசு கடை உரிமையாளர்கள் கூறுகையில், "நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு விற்பனை செய்து வருகிறோம். முழுக்க முழுக்க லாப நோக்கம் இல்லாமல் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி இந்த பட்டாசு கடையை நடத்தி வருகிறோம். எனவே இங்கு பட்டாசு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறோம். அதையே இந்தாண்டும் வழங்கி உள்ளோம்" என்றார்.


முதல் பரிசாக வழங்கப்பட்ட டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை (கோவை) 94 ஆயிரத்து 513 ரூபாய் முதல் 1 லட்சத்து 10 ஆயிரத்து 58 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் நான்கு வேரியண்ட்களில் டிவிஎஸ் ஜூபிடர் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில், நான்கு நிறங்களில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் கிடைக்கின்றன. 


மேலும் படிக்க | நவம்பரில் இயல்பைவிட 23% அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் - வானிலை மையம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ