டெல்லி விவசாயிகள் போராட்டத்தை போன்ற போராட்டத்தை அறிவித்த கோவை விவசாயிகள்
Coimbatore Farmers Announce Farmers Protest: டெல்லியில் விவசாயிகள் போராடியதை போன்று அடுத்த வருடம் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக கோவை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய மாநில அரசுகளை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராடியதை போன்று அடுத்த வருடம் உழவர் தினத்தன்று தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் மாநாட்டில் கோவை விவசாயிகள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டை இந்திய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகயர், தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் இந்த மாநாட்டை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன், ‘இந்த மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தேங்காய் கொள்முதல் விலையை 150 லிருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும். கொள்முதல் 250 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும். கள் இறக்கி விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | வாரிசு என்ற வசை கழியுங்கள் - அமைச்சர் உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து
தென்னைக்கு பரவும் வாடல் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அடுத்த வருடம் வருகின்ற உழவர் தினத்தன்று டெல்லியில் நடைபெற்றது போல தென்னை விவசாயிகள் ஜூலை 5ஆம் நாள் தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’ என்று கூறினார்.
மேலும் படிக்க | தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! முக ஸ்டாலின் அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ