தருமபுரி: தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரி்ல் சென்று வர அனுமதி வழங்க வேண்டும். விவசாயி ஒருவர் தனது குடு்ம்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன புகார் மனு அளித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேவுள்ள கே. அக்ரஹாரம் மேல் தெருவை சேர்ந்த கணேசன்( 57) என்ற விவசாயியே தனது வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்று வர தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என தனது குடும்பத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார்.
தன்னுடைய வீட்டிற்கு காலகாலமாக சென்று வந்த வழிப்பாதையை வீட்டருகே உள்ளவர்கள் நாலாபுறமும் அடைத்தும், தடுப்பு சுவர் கட்டிவிட்டதால் தனது சொந்த வீட்டிற்கே சென்று வர பாதை எதுவும் இல்லை என்றும், எப்படி வீடிட்ற்கு செல்வது என்றே தெரியவில்லை என்று வேதனையை பதிவு செய்தார். வேறு வழியில்லாமல் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக உறவினர் ஒருவரது வீட்டில் தஞ்சமடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கவில்லை! ஏமாறவேண்டாம்: எச்சரிக்கும் அரசு
தனது பிரச்சனை தொடர்பாக சம்மந்தபட்ட காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கும் விவசாயி கணேசன் தரை வழியில் தான், தனது வீட்டிற்கு சென்று வர முடியவில்லை, ஆகாய மார்க்கமாக வான்வழியாக ஹெலிகாப்ட்டரில் தன வீட்டுக்கு சென்று வர மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என புகார் மனு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
பொம்மை ஹெலிகாப்ட்டரை கையில் பிடித்தபடி,விவசாயி தனது குடும்பத்துடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் புகார் மனு அளிக்க வந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ