கோவையில் காதலை ஏற்க மறுத்த பெண்ணிற்கு கத்திகுத்து - இளைஞர் வெறிச்செயல்..!
CRIME : இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்ட இளம்பெண்ணிற்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞர் வெறிச்செயல் !
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பைனான்ஸ் துறை பயிற்சி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண்ணிற்கும் சேலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக நண்பர்களாக பேசி வந்துள்ளனர். இதில் இளம்பெண் மீது தினேஷிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் கோவை வந்த தினேஷ், இளம்பெண்ணை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தன் காதலை பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் காதலிக்க மறுத்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து தன்னை காதலிக்க வற்புறுத்தியதால் தினேஷின் எண்ணை அந்த பெண் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் இன்று காலை அந்த பெண் பணியாற்றும் நிறுவனத்திற்கு வந்து தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு மீண்டும் மிரட்டியுள்ளார். திட்டவட்டமாக தன் முடிவில் கண்ணியமாக இருந்த பெண், இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு கூறியிருக்கிறார். அதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற தினேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் முகம், தோள்பட்டை, தலை பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பெண், சுயநினைவை இழந்திருக்கிறார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தினேஷை மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க | நித்தியானந்தாவுக்கு சிலை, கும்பாபிஷேகம்... பரபரப்பை கிளப்பிய பக்தர்
கத்திக்குத்து வாங்கிய இளம்பெண் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து தினேஷை கைது செய்த போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | 145 தடை : ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கத்திகுத்தும் போலீசாரின் மண்டை உடைப்பும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR