145 தடை : ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கத்திகுத்தும் போலீசாரின் மண்டை உடைப்பும்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்து மோதலில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 11, 2022, 02:48 PM IST
  • மோதலில் ஈடுபட்டதாக 15 பேர் கைது - நடவடிக்கை
  • ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 13 பேர் படுகாயம்
  • பாதுகாப்பில் ஈடுபட்ட காவலரின் மண்டை உடைப்பு
145 தடை :  ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கத்திகுத்தும் போலீசாரின் மண்டை உடைப்பும் title=

அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடுவதற்கு முன்னதாக வானகரம் மற்றும் அதிமுக தலைமை அலுவலகத்தில் சூழ்ந்திருந்த ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டுக் கொண்டனர். ஒருவர் மாறி ஒருவர் கற்களால் தாக்கி ஆக்ரோஷமாக மோதி கொண்டனர். அப்போது ஓபிஎஸ் ஆதராவளர்களில் ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. மேலும் பலருக்கு மண்டைகள் உடைக்கப்பட்டது. இதற்கிடையே, மோதலில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் 13 பேர் கடும் படுகாயமடைந்தனர். மேலும் பாதுகாப்பில் ஈடுபட்ட 2 போலீசார் காயமடைந்தனர். அதில் ஒருவருக்கு மண்டை உடைப்பட்டு நிலைமை மோசமானது.

சீல், 145தடை, தடியடி ,போலீசாரின் மண்டை உடைப்பு,ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், சட்ட விரோதமக, சிறை தண்டனை,

இந்நிலையில், காயம்பட்டவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்து மோதலில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டு அராஜகத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் தாசில்தார் கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக தலைமை அலுவலகம் கொண்டுவரப்பட்டது. பிரச்சினை எல்லை மீறி போனதால் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக நுழைவு வாயிலுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சீல், 145தடை, தடியடி ,போலீசாரின் மண்டை உடைப்பு,ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், சட்ட விரோதமக, சிறை தண்டனை,

மேலும் படிக்க | அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் - அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்

முதல் தகவல் அறிக்கை மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதை கணக்கில் கொண்டு, அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாடி உரிய உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிமுக அலுவலகத்தில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிமுக அலுவலகம் இருக்கும் இடத்தில் யாரும் சட்ட விரோதமாக கூடக் கூடாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமியின் பேனர் கிழிப்பு - பழிதீர்ப்பா ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

 

Trending News