கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ துறை சார்ந்த மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் ஜூனியர் பிரச்சினையின் காரணமாக அடிதடி நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் கேரளா மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்த மாணவனை 10க்கு மேற்பட்டவர் தாக்கி அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கவுன்சிலர்களின் கணவர்களால் திமுகவுக்கு தொடரும் சிக்கல்! அடுத்தடுத்து வெளியாகும் விடியோக்கள்!


இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டபோது "சீனியர்ன்னா பெரிய இவனா நீ! இதுக்குமேலயும் அடங்கவில்லை என்றால் ஜட்டி இல்லாமல் சுத்தவிடுவோம்" என மிரட்டி அடித்துள்ளனர். பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து குனியமுத்தூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் அடி வாங்கிய மாணவனின் ஐபோனை பறித்து சென்று மிரட்டல் அளிப்பதாக கூறப்படுகிறது. இது காதல் விவகாரமா? கல்லூரியில் ரேகிங்? விவகாரமா என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



கல்லூரி மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுக்கு இடையே மோதல் பொதுவெளியில் நடைபெற்று பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் கதையின் நாயகன் மற்றொரு நாயகனின் உடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக அடித்து அனுப்பும் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது. அதே போன்று இந்த சம்பவமும் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



மேலும் படிக்க | காரில் சென்று வழி கேட்பது போல் நடித்து தொடர் செல்போன் கொள்ளை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR