கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காரில் சென்று வழி கேட்கும் மர்ம கும்பல் விலை உயர்ந்த செல்போன்களை பறித்துச் செல்வதாக அன்னூர் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த நிலையில் அன்னூர் - சிறுமுகை சாலையில் பூலுவபாளையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
மேலும் படிக்க |கஞ்சா போதையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் - கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலம்..!
விசாரணையில் சிறுமுகை பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் வெங்கடாசலபதி (24) என்ற இளைஞர் தனது நண்பர்களான சிறுமுகையைச் சேர்ந்த வினோத், காரமடை பகுதியை சேர்ந்த விக்னேஷ் குமார் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மதன் ஆகியோருடன் காரில் சென்று வழி கேட்பது போல நடித்து தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த 5 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் கார் ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சாலையில் நடந்து செல்லும் நபர்களிடம் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் காரில் இருந்து வழி கேட்பது போல நடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்கள் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR