கோவையில் இனி எங்கு சென்றாலும் இலவச wi-fi இருக்கு - கவலை எதுக்கு !
கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் இலவச wi-fi சேவை துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அலங்கார விளக்குகள் எல்இடி திரை மற்றும் பொழுதுபோக்கு தளங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே கோவை மாநகராட்சியுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் இலவச வைஃபை இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக Wi-Fi மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு ஒரே நேரத்தில் சுமார் 150 பேர் அதிவேக இணைய சேவையை இலவசமாக பயன்படுத்தலாம்.
ஏற்கனவே வஉசி மைதானத்தில் Wi-Fi மரம் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகே Wi-Fi மரம் துவங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநகரில் துடியலூர், காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த Wi-Fi மரம் அமைக்கப்பட உள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | குப்பை கொட்டுபவர்களை போட்டோ எடுத்து கொடுத்தால் ரூ.500 ரொக்கப்பரிசு!
காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தடையின்றி இணைய சேவை வழங்க உள்ளதாகவும் அதிவேக இணையதள பயன்பாட்டை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | யுபிஎஸ் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அவலம் !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR