வேலூர் மாநகராட்சி குப்பை தொட்டி இல்லா மாநகராட்சி ஆகும். இதற்க்கு மாற்றாக மொத்தம் உள்ள 60 வார்டுகளில் பொது மக்கள் குப்பைகளை வீட்டிலேயே மங்கும் குப்பை, மங்காத குப்பை என தரம் பிரித்து வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
ஆனால் பலர் குப்பைகளை தரம் பிரித்து வழங்காமல் பொது இடத்தில் கொட்டிவிடுகின்றனர். இதனால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொறுட்டும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வேலூர் மாநகராட்சி 2- வது மண்டலத்திற்க்குட்பட்ட 27 வாது வார்டில் வார்டு உறுப்பினர் சார்பில் "நூதனமான" விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்
அதில் "உறைக்கிற மாதிரி ஒரு வார்த்தை" என்ற வாசகத்துடன் பணத்தை மட்டுமே கரெக்டா பேங்கில் போடுறிங்க, அதுமாதிரி குப்பையையும் குப்பை வண்டியில் போட்டால் என்ன?. மீறி குப்பை கொட்டினால் 5000 அபராதம் மற்றும் பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை போட்டோ எடுத்து கொடுத்தால் 500 ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 9944581740 என்ற எண்ணில் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!
மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR