Coimbatore Lok Sabha Constituency Full Details: தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரு முக்கியமான மக்களவைத் தொகுதி தான் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி. இது பெரிய தொழில் நகரமாகும். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி என்பது தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தென் சென்னை தொகுதிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்காளர்கள் கொண்ட மூன்றாவது மக்களவைத் தொகுதியாகும். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி விவரம்


தமிழ்நாட்டில் 2009ல் தொகுதி மறுவரையறைக்கு பிறகு கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் மற்றும் பல்லடம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அதற்கு முன்னதாக கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், சிங்காநல்லூர், பல்லடம், திருப்பூர் ஆகிய தொகுதிகள் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இருந்தது. 


1951 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் தொகுதி மக்களவைத் தேர்தலைச் சந்தித்து வருகிறது. முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.ஏ.ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களம் இறங்கிய பார்வதி கிருஷ்ணன் வெற்றி பெற்றார். 


கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியை பொறுத்த வரை அதிக முறை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுக ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 


மேலும் படிக்க - தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறு


கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்


- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,83,034
- ஆண் வாக்காளர்கள்: 10,30,063
- பெண் வாக்காளர்கள்: 10,52,602
- மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 369


கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்


- கோவை தெற்கு
- கோவை வடக்கு
- சிங்காநல்லூர்
- கவுண்டம்பாளையம்
- சூலூர்
- பல்லடம்


மேலும் படிக்க - தேர்தல் 2024: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு


2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்


திராவிட முன்னேற்றக் கழகம் - கணபதி ராஜ்குமார் 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - சிங்கை ராமச்சந்திரன்
பாரதிய ஜனதா கட்சி - கே.அண்ணாமலை
நாம் தமிழர் கட்சி - கலாமணி


2019 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதி வெற்றி நிலவரம்


2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த முறை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பி.ஆர். நடராஜன் 571,150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 
3,92,007 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆர்.மகேந்திரன் 1,45,104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  எஸ்.கல்யாண சுந்தரம் 60,519 வாக்குகளும் பெற்றனர். 


மேலும் படிக்க - தேர்தல் 2024: வட சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ