தேர்தல் 2024: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

Tamil Nadu Chennai Central Parliamentary Constituency History:  இந்தியாவின் மிகச்சிறிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான மத்திய சென்னை தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 15, 2024, 11:24 PM IST
  • மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,43,167 ஆகும்.
  • மத்திய சென்னை தொகுதியை பொறுத்த வரை திமுகவின் கோட்டை எனக் கூறலாம்.
தேர்தல் 2024: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு title=

Chennai Central Lok Sabha Constituency Full Details: தமிழ்நாடு தலைநகரம் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் மத்திய சென்னையும் ஒன்றாகும். முன்பு இது மெட்ராஸ் சென்ட்ரல் என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் மிகச்சிறிய தொகுதிகளில் ஒன்றாகும். மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி விவரம்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் கீழ் வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு 1977 முதல் 2019 வரை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பி.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். மத்திய சென்னை தொகுதியை பொறுத்த வரை திமுகவின் கோட்டை எனக் கூறலாம். இந்தத் தொகுதியில் திமுக எட்டு முறை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்து காங்கிரஸ் மூன்று முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.  1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டமுரசொலி மாறன் தொடர்ந்து மூன்று முறை வெற்றியை பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

மேலும் படிக்க - தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்

- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 13,43,167
- ஆண் வாக்காளர்கள்: 6,64,076
- பெண் வாக்காளர்கள்: 6,78,658
- மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 433

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்

- வில்லிவாக்கம்
- எழும்பூர் (தனி)
- அண்ணாநகர் 
- துறைமுகம்
- சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
- ஆயிரம் விளக்கு

மேலும் படிக்க - தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

2024 லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்

திராவிட முன்னேற்றக் கழகம் - தயாநிதி மாறன் 
பாரதிய ஜனதா கட்சி - வினோத் பி செல்வம்
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் - பார்த்தசாரதி
நாம் தமிழர் கட்சி - கார்த்திகேயன்

2019 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதி வெற்றி நிலவரம்

2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 448,911 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1,47,391 வாக்குகள் பெற்ற பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.சாம் பால் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கமீலா நாசர் 92,249 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர். ஆர்.கார்த்திகேயன் 30,886 வாக்குகளும் பெற்றனர்.

மேலும் படிக்க - தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News