சகோதரியை துண்டுத்துண்டாக வெட்டி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
எட்டு வயது மகளின் கண்முன்னே தாயை கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரது மனைவி மங்கையர்கரசி. இவருக்கு சங்கீதா என்ற மகளும் சரவணகுமார் என்ற மகனும் இருந்தனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது எட்டு வயது மகளுடன் சிங்காநல்லூர் உள்ள தனது தாயின் வீட்டில் வசித்து வந்தார்.இதனால் சங்கீதாவின் சகோதரர் சரவணகுமார் கடும் ஆத்திரம் அடைந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மங்கையர்க்கரசி வேலைக்கு சென்ற விட சரவணகுமார் சங்கீதா மற்றும் 8 வயது சிறுமி வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சங்கீதாவுக்கும் சரணவக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், சகோதரன் சரவணகுமார் சங்கீதாவை எட்டு வயது சிறுமியின் கண் முன்னே, வீட்டில் இருந்த அரிவாளால் கொடூரமாக துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்தார். மேலும் சங்கீதாவின் உடலை சூட்கேசில் வைத்து இருசக்கர வாகனத்தில் 8 வயது சிறுமியுடன் எஸ்ஹெச்எஸ் காலனி பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு சூட்கேஸைத் திறந்து சங்கீதாவின் உடலை வெளியில் எடுத்த சரவணக்குமார் பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதுதொடர்பாக வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என 8 வயது சிறுமியை மிரட்டிய சரவணகுமார் அங்கிருந்து தப்பினார். இதுதொடர்பாக மங்கையர்க்கரசி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்தனர். அதில் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | முறை தவறி பள்ளி மாணவியைக் காதலித்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!
இந்த வழக்கின் விசாரணையானது கோவை கூடுதல் மாவட்ட நீதிபதி முன் நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணகுமார் குற்றவாளி என அறிவித்ததுடன், சரவணகுமாருக்கு ஆயுள் தண்டனையுடன் 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சரவணகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க | ‘சைக்கோ கணவனால்’ கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மனைவி..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR