கோவை இடையர்பாளையம் டி.வி.எஸ் நகரைச் சேர்ந்தவர் எட்வர்ட் ஜான். இவரது மனைவி கிரேஸ் பியூலா. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். போதைக்கு அடிமையான எட்வர்ட் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே காலத்தை கடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி கிரேஸ் பியூலாவின் சகோதரி திருமணம் கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது. அப்போது கிரேஸ் பியூலா அவரது உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது கணவர் எட்வர்ட் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையார்பாளையத்தில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்று விட்டு இரவு வீட்டு திரும்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தந்தையை துடிதுடிக்க கொலை செய்த வளர்ப்பு மகள்..!


அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட் ஜான், செல்பி எடுத்தது தொடர்பாக மனைவியிடம் தகராற்றில் ஈடுபட்டு அவரை அடித்துள்ளார். மேலும், ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கத்தியை கையில் எடுத்த எட்வர்ட் பியூலாவின் கழுத்தில் குத்தியுள்ளார். காயமடைந்த கிரேஸ் பியூலா தனது தாய் தமிழ்ச்செல்விக்கு செல்போன் மூலம் தகவலை தெரிவிக்கவே, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இது குறித்து தமிழ்ச்செல்வி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | கழிவறையால் உயிரை விட்ட காதல் மனைவி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR