`கஞ்சா சப்ளை` யராக மாறிய போலீஸ் - சிக்கியது எப்படி ?
கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட - கோவை கமிஷனர் பிரதீப்குமார் அதிரடி நடவடிக்கை.
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் மாநிலம் முழுக்க கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது கோவை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ்குமார் என்பவர் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீசார், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள கணேஷ் குமாரின் வீட்டைச் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிதளவு கஞ்சா மற்றும் சில பொருட்களை கைப்பற்றியதுடன் கணேஷ்குமாரை கைது செய்து புதுக்கோட்டை அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் கணேஷ் குமாரை கைது செய்திருப்பது தொடர்பான ஆவணங்களை கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமாரிடம் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை காவலர் கணேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | ஆசை இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையோடு எரித்து கொன்ற கொடூரன்..!
இதனிடையே புதுக்கோட்டை மாவட்ட போலீசார் கைது செய்துள்ள காவலரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். கஞ்சா எங்கிருந்து கிடைத்தது, இதன் பின்னணியில் வேறு கும்பல்கள் இருக்கின்றனரா என்பது குறித்தும் விசாரணை நடத்த இருக்கின்றனர். கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறையினர் களத்தில் இறங்கியபோது, காவலரே அதில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அடுத்தடுத்து கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் - யார் மீது தவறு ?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR